போர் நிறுத்தமே கோரவில்லை.. கோத்தபயா..
கோத்தபயா அளித்த பேட்டியிலிருந்து..
சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்
விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது தி/ருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள்
தாம் நடத்தும் நாடகங்களின் மூலம் திருப்தி அளிக்கிறது, வெற்றி என பறைசாற்றிய கலைஞர் கருணாநிதியின் பதில் என்ன? மத்திய அரசு நமது ஆறு கோடி மக்களையும் ஏமாற்றிக் கொண்டு தன்னையும் ஏமாற்றுவது தெரிந்தும் சுயமரியாதைச் சீடர் இன்னும் வாய் பொத்தி மவுனியாய் இருப்பதற்கு தானா இயற்கை அவரை இவ்வுலகிலும், இருக்கையிலும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது ?!
6 மறுமொழிகள்:
கருணாநிதி அடிவருடி விளம்பரப்புயல் லக்கிலுக்கு இந்த தகவலை பார்வேர்ட் பண்ணுங்கள்.
மேற்கண்ட அனானி கமெண்டை போட்ட தோழர் வந்தியத்தேவனுக்கு நன்றி! :-)
உங்கள் பதிவும் அருமை. பின்னூட்டங்களும்(!?) அருமை..
மிக்க நன்றி தீப்பெட்டி..
பொய் சொல்வது இலங்கையா,
இந்தியாவா, இரண்டுமேவா?
மானங்கெட்டக் காங்கிரசுக்கு கோவணங்கூட மிஞ்சாது.
ஏன் நீ இவர்களை விட்டு விட்டாய் ..தமிழ்குடிதாங்கி ராமதாஸ், வைகோ, திருமா, சீமான்..எப்பொழுதும் தமிழ் பரை சாற்றும் தங்கர் பச்சான், மற்றும் பழ நெடுமாறன்............
என்னமோ கலைஞர்மட்டும் தான் உனக்கு எதிரி போலும்.
Post a Comment