கலைஞர் சாகும்வரை உண்ணாவிரதம்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரினாலும், இனப்படுகொலைகளாலும் பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் நம் தமிழ் மக்களைக் காக்க பல மாதங்களாய் நாட்களைக் கடத்தி செயல்படாமலிருந்தாலும் தற்போதைய செல்வாக்கு, இறுதி எச்சரிக்கை ஆகியனவற்றை முதலில் நம் மனதில் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க கலைஞர் ஆரம்பித்துவிட்டார். அவர் ஓட்டிற்காக, அனுதாபத்தை கவர்வதற்காக எடுக்கிறாரா எனபது முக்கியமில்லை. அவ்வாறு சொல்ல ஜெயலலிதா ஒருவர் இருக்கிறார்.
இந்த உண்ணாவிரதத்தை மதித்தாவது மத்திய அரசு இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்து போரை நிறுத்தி பட்டினியால் வாடி மடிந்துகொண்டிருக்கும் நம் மக்களை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் காங்கிரசு எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படும்.
தமது தலைவனை (கலைஞர்) உண்ணாவிரதம் இருக்க வைத்து வாட்டி எடுக்கும் காங்கிரசுக்கு உண்மையான உடன் பிறப்புக்கள் ஓட்டளிக்குமா ?!
5 மறுமொழிகள்:
ahahahaha....best post!
super comedy!!!
அய்யோ அய்யோ... இன்னுமாடா இந்த ஊரு நம்பல நம்பிட்டு இருக்கு...
திருத்தம்: சாகும் வரை உண்ணாவிரதம் இல்லை. காலவரையற்ற உண்ணாவிரதம் என்று தான் கூறினார்.
//இந்த உண்ணாவிரதத்தை மதித்தாவது மத்திய அரசு இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்து போரை நிறுத்தி பட்டினியால் வாடி மடிந்துகொண்டிருக்கும் நம் மக்களை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் காங்கிரசு எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படும்.//
ம்ம்ம்ம்ம்ம்.... இருக்கலாம்..
வர வர வடிவேலுவை மிஞ்சிகிட்டு இருக்கார் கலைஞர்.
வாழ்க தமிழுடன்,
நிலவன்
Post a Comment