தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை


ஆங்கிலமல்லாத மொழி பேசும் மக்கள் 90 விழுக்காட்டிற்கு மேல் இருக்கும் இந்தியாவில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த மொழிகளில் இணையத்தை நாடுவது மிக்க அவசியமாகிறது.
தகவல்கள் தேடுவதும் அறிவதும் மிக முக்கியமானதொரு விடயமாய் அமைந்துவிட்ட இக்கால கட்டத்தில் விக்கிப்பீடியா போன்ற தகவல்களஞ்சியம் மிக தகவல் பகிர்வுக்கான முக்கிய பங்காற்றுகிறது. விக்கிப்பீடிய ஆரம்பித்த 2001 ஆம் ஆண்டிலிருந்து தற்போது 12 மில்லியன் கட்டுரைகளை அடக்கியிருக்கிறது. இதில் மிகவும் சுவாரசியமான தகவலாக 23 விழுக்காடு மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளது. இது ஆங்கிலமல்லாத மொழிகள் எந்த அளவுக்கு விக்கிப்பீடியாவை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதையும், ஒவ்வொருவரும் தத்தம் மொழிகளுக்கு எவ்வளவு பங்காற்ற வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

பல்வேறு இனமக்களை உள்ளடக்கிய 90% விழுக்காடுக்கு மேல் ஆங்கிலமல்லாத மொழிகள் பேசும் இந்திய போன்ற நாடுகளுக்கு இணையத்தை பெரும்பான்மையான் மக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகவும் சவாலான ஒன்று. விக்கிப்பீடியா தகவல் களஞ்சியத்தில் அரசும், கல்வி ஆராய்ச்சி நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் பெரும் பங்கு கொண்டு விக்கிப்பீடியாவை தத்தம் மொழிகளில் உருவாக்க பெரும் திரளாய் உழைத்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு சென்னை விக்கிப்பீடியா கல்வியை அறிமுகப்படுத்தி பெரும்திரளான பங்கேற்பாளர்களைக் கொண்டு முன்னிலை வகித்தது.

பெங்களூர் விக்கிப்பீடியா ஆர்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை முதலாவதாய் நடத்தி உள்ளனர்.பெங்களூர் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை தொழில்நுட்பர்களையும் ஆர்வலர்களையும் கொண்டு கோரமங்களாவில் ஆரம்பித்து தம் சேவையை தொடங்கியிருக்கிறது.

பயிற்சிப் பட்டறை தொழில்நுட்பர்களின் அறிமுகப்படலத்தில் தொடங்கி விக்கிப்பீடியா, தகவல்களஞ்சியத்தின் அறிமுகம், பயன்கள், செயல்முறை, பயன்படுத்தும் வழிகள், எளிய வழிகள் போன்றவற்றை எளிதாக இனிமையாக சுந்தரராமன் விவரித்தார். இவற்றில் இனிமையாக ஏனென்றால் அழகிய தமிழில் பெரும்பாலான தொழில்நுட்ப வார்த்தைகளையும் சுத்தமான தமிழில் விவரித்தது அவர் விக்கிகளஞ்சியத்திற்கு ஆற்றிய பங்கின் அனுபவம் தெரிந்தது. பெரும்பாலனவர்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருந்தாலும் தம்மாலும் கட்டுரையை இணைக்க முடியும் என்பது போன்ற தகவல்களை அறிந்து ஆச்சர்யப்பட்டனர், மேலும் ஆர்வமாயுமிருந்தனர். தமிழ் விக்கிப்பீடிய களஞ்சியம் பற்றி ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி பின் தமிழ் எழுத்துருக்களையும், அதன் வடிவமைப்பு, தட்டச்சு வடிவமைப்புகள், தமிழ் மென்பொருள்கள போன்றவற்றிலும் விவாதங்கள் தொடர்ந்தது. இதில் தமிழில் எழுதுவது எப்படி என்ற விவாதங்களில் ஈ-கலப்பை, என்.ஹெச்.எம் மென்பொருள்கள் பயன்படுத்துவது எப்படி என்ற செயல்முறைகளை முகில்டெக் நிறுவனர் முகுந்த் விவரித்தார்.

தமிழில் விக்கிப்பீடியா, தமிழில் எழுதுவது, இணையத்தில் தமிழில் கட்டுரைகள் படிப்பது போன்றவற்றை தமிழ் தொழில்நுட்பர்கள் மேற்கொண்டிருந்தாலும் இன்னும் பெரும்பாலானவர்களுக்கு இணையத்தில் தமிழ் போன்றவற்றை அறியாமலும் ஆர்வமில்லாமலும் இருக்கின்றனர். தமிழுக்காக பங்கேற்று வாய்ப்பு தேடும் தமிழன்பர்களுக்கு விக்கிக் களஞ்சியம் அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழில் கட்டுரைகள் எழுதி விக்கிக்களஞ்சிய்த்திற்கு பங்காற்றும் தமிழார்வலர்கள் பின்னொரு நாளில் தமிழில் பெரும்பாலான தகவல்களை அறிவதோடு, தமிழ் எழுத்து, நடை, கட்டுரை முறை, புதிதான தமிழ் வார்த்தைகளை அறிவது போன்ற பெரும்பாலான பயன்களை அனுபவக்கின்றனர் என்பது ஆச்சர்யமூட்டும் ஒன்று. ஆக தமிழ்ப்பணியாற்ற தளம் தேடும்
தமிழார்வலர்கள் பயன்படுத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே?
எப்படி பயன்படுத்துவது ?

http://ta.wikipedia.org என்னும் இணைய தளத்திற்கு சென்றால் உங்களுக்கு தமிழில் தகவல்கள், செய்திகள், சிறப்புக் கட்டுரை என முகப்புப் பக்கம் கிடைக்கும். இதில் இடதுபக்கத்திலுள்ள தேடுபொறியில் உங்களுக்கு தேவையான வார்த்தையை தட்டச்சு செய்து ( தமிழ் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்) தேடு என்னும் பொத்தனை சொடுக்க உங்களுக்கு பதில்கள் கிடைக்கும். அப்பதிலில் பொருத்தமான வற்றை சொடுக்க உங்களுக்கு தகவல் தெரியும்.
ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள லிங்கை சொடுக்க உங்களுக்கு தகவல் பக்க்கத்தை படித்துக் கொண்டே இருக்கலாம். நீங்கள் தேடும் வார்த்தைகள் இல்லையெனில் அதை நீங்களே உருவாக்கி விக்கிக்களஞ்சியத்தில் இணைக்க முடியும். உங்களது கட்டுரைகளை இணைப்பது எப்படி போன்றவற்றை அடுத்த பகுதியில் விவரிக்கிறேன்.


1 மறுமொழிகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar Tue Jun 16, 11:19:00 PM  

அறிமுகத்துக்கு நன்றிங்க.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !