முத்தமிழ் அறிஞராம், தமிழினத் தலைவராம்
தாங்களின் கோரிக்கைகளையெல்லாம் பொறுப்பின்றி தட்டிக்கழித்தும் நடவடிக்கை எடுக்காமல் அவமதித்து அவமானப்படுத்தும் நடுவண் அரசை கண்டிக்க வழிகளின்றி தன்னால் முடியாத ஒன்றைக் கொண்டு தான் இந்த அரசில் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ?
தமிழகத்தின் முதல்வாராய் இருந்து என்ன பயன் ? எதை சாதிக்க ஆட்சியிலே அமர்ந்து கொண்டிருக்கிறோம்? பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என ரஜினி சொன்னார், கமல் சொன்னார், இன்னும் சிலர் சொன்னார். ஆனால் இவரது தவப்புதல்வர் தடபுடலாய் கொண்டாடினார். எங்கே இவர்களின் தமிழுணர்வு மேலோங்கி இருக்கிறது ? தமிழினத்தை ஆக்ரோசத்துடன் அழித்துக் கொண்டிருப்பதை நிறுத்த முடியாத நிலையில் தனக்கு ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் எனத் துடிப்பது எவ்வளவு கொடூரம் ? அதிலும் இயலாமையில் இருக்கும் இவரது ஆட்சியை பறிக்க எதிர்க்கட்சி சூழ்ச்சி செய்கிறதாம் ? ஈழத்தமிழருக்காக உயிரை விடவும் தயார், ஆட்சியை இழக்கவும் தயார் என வெறும் வெற்றுப்பேச்சுக்கள் ஏன் எதற்கு என மக்களுக்கு விளக்கலாமே ?
ஆட்சியை விட்டு அகலுங்கள் என மக்கள் நினைத்திருக்கையில் இவரது ஆட்சிக்கு சூழ்ச்சி வேறு செய்கிறார்களாம் ? .. என்னே நாடகம் இவ்வரங்கினில் ?
விடுதலைப் புலிகளை யார் ஆதரிக்கிறார்கள்? எதிர்க்கிறார்கள் என்ற பிரச்சனையை விட்டு போரை நிறுத்தி தமிழர்களின் வாழ்வு மேலோங்கிட வழி காணுங்கள் என்றால் இவர்களுக்குள் நடக்கும் அறிக்கைப் போர்கள் நம்மை அங்கலாய்க்கின்றன.
வாய்வீச்சில் வீரர் பலப்பல கதைகள் சொல்லி நம்மை குழுப்புவதில் முழுக்கவனம் செலுத்துகிறார். ராமதாசு, வைகோ, திருமா இவர்களின் உணர்வாய் அமைந்த கூட்டணியில் எங்கோ நாம் தனிமைப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் செயற்குழு கூட்டி ஈழத்தமிழர் நல்வாழ்வு பற்றி கூட்டணி, கருத்தரங்கம் நடத்தி அறவழியில் போராடப் போகிறார்களாம் ? என்னே விந்தை ! என்னே வியப்பு ! இன்னும் சிறிது காலத்தில் இலங்கை அரசு தமிழினத்தை அழித்து விட்டால் இவர்களின் அறவழி மக்களை முட்டாள்கள் என இவர்களின் தொலைக்காட்சி, வானொலி, தினசரி ஊடக பலத்திற்கு நல்ல உதாரணம். ஓடாத படத்தைக் கூட ஓடவைக்கும் இவர்களின் ஊடகங்கள் தேறாதைவைகளை திறமையாய் காட்ட நல்ல வழிகள்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராய் இலங்கைத் தமிழர் நல்வாழ்வு பேரவை தொடங்கி நாங்களும் இயக்கம் வைத்தோம், போராட்டம் நடத்தினோம் என கலைஞர் தொலைக்காட்சியில் காட்டுவதற்கா ? அதுசரி யாரை எதிர்த்து போராட போகிறீர்கள்? தமக்கிருக்கும் அதிகார பலம், பணபலம், ஊடகபலம் போன்றவற்றின் மூலம் இழந்திருந்த செல்வாக்கினை ஈட்டமுடியும் எனத் திடமான திறமை கொண்ட கலைஞர் இந்த வயதிலும் ஆட்சிக்கும், பதவிக்கும் ஆசை வைத்திருப்பது பேராசை தான்.
இனப்படுகொலை கொள்ளும் ராஜபக்சே வானாலும் சரி.. வெறும் பதவிக்காக அடக்கி வாசிக்கம் கலைஞரும் சரி.... விடுதலைப்புலிகளை எதிர்க்கிறேன் என்ற ஒற்றைக் காரணங்களில் தமிழர்கொலைகளை அனுமதித்து அமைதிகாக்கும் ஜெயலலிதாவும் சரி... எல்லோருமே தமிழின எதிரிகள் தான்.
6 மறுமொழிகள்:
//இனப்படுகொலை கொள்ளும் ராஜபக்சே வானாலும் சரி.. வெறும் பதவிக்காக அடக்கி வாசிக்கம் கலைஞரும் சரி.... விடுதலைப்புலிகளை எதிர்க்கிறேன் என்ற ஒற்றைக் காரணங்களில் தமிழர்கொலைகளை அனுமதித்து அமைதிகாக்கும் ஜெயலலிதாவும் சரி... எல்லோருமே தமிழின எதிரிகள் தான்.///
தேர்தலில் இதனைக்காட்டினால் சரி.
கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்க்கு மாரடிப்பவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ
மிகச்சரியாகச் சொன்னீர்கள் கணேசன்..
//தேர்தலில் இதனைக்காட்டினால்
சரி.//
தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டோ ? என்ன இலவசமோ ?
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
Post a Comment