திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்

அடுக்கடுக்காய் போராட்டம் நடத்தியும், பலதரப்பட்ட மக்களால் தமிழகமெங்கும் ஏராளமான போராட்டம் நடத்தியும், சட்டமன்றத்தில் தீர்மான நிறைவேற்றியும், நேரில் வலியுறுத்தியும் அசைந்து கொடுக்காமல் செவ்வனே காதை பொத்திக் கொண்டிருக்கும் நடுவண் அரசு திருமாவளவனின் உண்ணாவிரதத்திற்கு செவி கொடுக்குமா எனத் தெரியவில்லை.

ஊடகங்களும் தமிழனுக்காக, தமிழுக்காக உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லையே ஏன் ? இதுவே திமுக அல்லது நடிகன் எவனாவது தமிழனுக்காகவோ அல்லது வேறு எதுக்காகவோ உண்ணாவிரதமிருந்தால் நேரலை ஒளிபரப்பி, வருபவர்களை பேட்டி எடுத்து காசு பார்த்திருக்கும்..

தமிழகத்தில் நெறைய்ய்ய்ய்ய்ய்யயயய....... அலைவரிசை ஆரம்பித்து பல துறைகளில் கிளை பரப்பி துட்டு சம்பாதிக்கும் தொலைக்காட்சிகள் ஒதுக்குவது ஏனோ மனதை சங்கடப்படுத்தத் தான் செய்கிறது.தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், மூத்த தமிழறிஞர், உலகத் தமிழ் தலைவர், வாழ்நாள் சாதனையாளர் எனக் கூறிக் கொண்டு ஆட்சி நடத்தும் கலைஞர் தனது 'கலைஞர்' தொலைக்காட்சியில் கூட காட்டாமல் இரட்டடிப்பு செய்வது என்ன நியாயம் என்றே தெரியவில்லை..

சிவசங்கர் மேனன் செல்வது வேறு ஏதோ அரசியல் காரணங்கள் என ஆங்கில ஊடகங்கள் அலங்கரித்தாலும், கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர்களைக் காக்கவும், போர் நிறுத்தம் செய்யவும் என இரட்டடிப்பு செய்து தம் சாதனை விளக்குகிறது என்ன நியாயம் ? யாராவது சொல்லுங்களேன்..

எனினும் தமிழின படுகொலைகள், மனித உரிமை மீறலகளும், போர் மரபு மீறல்களும் கண்டு பொறுக்காது தனது கடைசி முயற்சியாய் தனது உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் எழுச்சித் தமிழன் திருமாவளவன் வெற்றி பெற்று தமிழினம் காக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம்.

1 மறுமொழிகள்:

நட்புடன் ஜமால் Fri Jan 16, 05:24:00 PM  

\\அடுக்கடுக்காய் போராட்டம் நடத்தியும், பலதரப்பட்ட மக்களால் தமிழகமெங்கும் ஏராளமான போராட்டம் நடத்தியும், சட்டமன்றத்தில் தீர்மான நிறைவேற்றியும், நேரில் வலியுறுத்தியும் அசைந்து கொடுக்காமல் செவ்வனே காதை பொத்திக் கொண்டிருக்கும் நடுவண் அரசு திருமாவளவனின் உண்ணாவிரதத்திற்கு செவி கொடுக்குமா எனத் தெரியவில்லை.\\

சந்தேகமே இல்லை ...

இருப்பினும் நல்லது நடக்காதா என்ற அவா மனம் முழுதும் ...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !