தமிழன் என்ன இளிச்சவாயனா?

( யாருப்பா அது புதுசா ?)

கிட்டத்தட்ட ஞாநி அவர்களையே மிஞ்சும் அளவிற்கு கலைஞரின் சாதனைகளை ‘நாட்டாமை’ என்னும் பயனர் ஆர்குட் குழுமத்தில் பதிவிடப்பட்டிருந்தவைகள் உங்களின் பார்வைக்கு. நீங்களும் உங்களோட கருத்தை பின்னூட்டமிடுங்க..

1 ) விவசாயக்கடன் ரத்து
விளைவு: கடன் வாங்காதவன் முட்டாள்,வாங்கியவன் அறிவாளி.ஆகவே எல்லோரும் கடன் வாங்கி கட்டாவிட்டால் அரசு தள்ளுபடி செய்துவிடும்.ஆகவே தமிழ்நாட்டில் எல்லோரும் கடன்காரர்களாகி விடலாம். ஜாலி...... சும்மா கிடைக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா?

2) ஆக்ரமித்தவனுக்கு நிலம் சொந்தம்
விளைவு: நேர்மையாளன் எல்லாம் அடிமுட்டாள்கள்.ஆக்ரமிப்பு செய்தவன் அறிவாளி. ஆகவே பத்து வருடம் கழித்து ஒரு இடத்திற்கு பட்டா வேண்டு மென்றால் இப்பொழுதே ஆக்ரமித்து கொள்ளுங்கள்.அதை பாதுகாக்க அடாவடியாக இருக்க இப்பொழுது முதல் தயாராகி கொள்ளு(ல்லு)ங்கள். சும்மா கிடைக்கும் இடத்தை வேண்டாம் என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா? கோடு போட்டால் ரோடு போடுவான்.

3) தை மாதம் முதல் மாதம்
தமிழன் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.
தை மாதம் தயாளு மாதம் ஆகியிருந்தால் அல்லக்கைகளுக்கு புல்லரிச்சிருக்கும். உலகத்தின் வரலாற்றில் இந்த வேலையை எந்த முட்டாள் கொடுங் கோலனும் செய்யவில்லை. இனிவரும் ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு வழிகாட்டி. ஏற்கனவே சரிவர பயன்படுத்தாத தமிழ் காலண்டரை ஒழித்துக்கட்ட இதை விட சிறந்த வழி ஏதுமில்லை. இனி கடவுள் கூட காப்பாற்ற முடியாது.
விளைவு: இந்த ஏற்பாட்டினால் போன வருடத்தில் தொலைந்து போன பத்து அல்லது இரன்டு (எத்தனை என்று குழப்பம்) மாதங்களால் எதிர்காலத்தில் ஏற்படும் குழப்பங்களை பயன்படுத்தி பாமரனை ஏமாற்றலாம். சும்மா கிடைக்கும் சந்தர்ப்பத்தை வேண்டாம் என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா?அந்த மாதங்களில் பத்திரம் பதிந்து கேஸை போடுவான்.

4) கைதிகளுக்கு புது ஜெயில், கோழிக்கறி
நேர்மையாளன் எல்லாம் அடிமுட்டாள்கள்.தப்பு செய்தவன் விருந்தாளி. இப்போதைக்கு கோழிக்கறி மற்றவை பின்னர் .தப்பு செய்கிறவனுக்கு கோழி போடு தப்பு செய்யாதவனுக்கு வரியைப் போடு.அல்லக்கை முண்டத்திற்கு எலும்பை போடு.
விளைவு: தண்டனைகள் இனிக்கும் போது தப்பு செய்யத்தோன்றாதா? சும்மா கிடைக்கும் கோழிக்கறியை வேண்டாம் என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா? கோழி போட்டால், ஆடு கிடைக்க என்ன செய்யவேண்டுமென்று கேட்பான்.

5) இலவச டிவி
உலகத்திலயே படு மோசமான செய்கையாக வரலாற்றில் பதிவு செய்யப்படுவது உறுதி.
உலகெங்கும் ஆபத்து விளைவிக்கும் குப்பையாக கருதப்பட்டு வெளி நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பிக்சர் டியூப் குப்பைகளால் செய்யப்பட்ட 60 லட்சம் டிவிக்கு 1500 கோடி ரூபாய் முதலீடும், ஒரு மாதத்திற்கு ஒரு டிவிக்கு சுமார் 100 மணி நேரம் வீதம் 60 லட்சம் டிவிக்கு முப்பதாயிரம் மெகா யூனிட் மின்சாரமும் தேவை. இது தமிழ்நாட்டின் மொத்த உபயோகத்தில் சரிபாதி அதனால்தான் இந்த திடீர் மின்சாரத் தட்டுப்பாடு. இனி அதற்கான முதலீடு மற்றும் பராமரிப்புக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை, இது அனைத்தும் கலாச்சார சீரழிவுக்கான (முத்தமிழ் வளர்ச்சிக்கான) அரசுப்பணம்.
இதானால் பயன் பெறப்போவது முதல்வரது குடும்பம். ஒரு டிவிக்கு 100ரூபாய் வீதம் 60 லட்சம் டிவிக்கு மாதம் 60 கோடி மற்றும் எண்ணிக்கை கூடுதலால் விளம்பர வருமானம் 6000 கோடி ரூபாய்.அரசு கேபிள் ஒரு கண் துடைப்பு. நாங்கதான் டிஷ்க்கு மாறிட்டோமில்லே!
விளைவு: மக்களது கேளிக்கைக்கு அரசு பத்தாயிரம் கோடி செலவு செய்யும் போது சினிமாத் தொழில் முன்னேறி விடும் இனி ரீமிக்ஸ், ரீரீரீமிக்ஸ், பாடல்கள் ரீமேக், ரீரீரீமேக் படங்கள், குடும்பத் தயாரிப்புகள் செழித்தோங்கும், கர்ப்பினி ஆட்டம், கருவுக்குள்ளிருக்கும் குழந்தை ஆட்டம் என தூள் கிளப்பு வார்கள். சும்மா கிடைக்கும் கேளிக்கையை வேண்டாம் என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா? எத்தனை நபர் மற்றும் சேனல் உள்ளதோ அத்தனை டிவி கேட்பான்.

6) புதிய அரசு ஊழியர் நியமனம் 3,00,000 மற்றும் சம்பள உயர்வு
புதிய நியமனம்: இது 15 லட்சம் உறுதி செய்யப்படும் புதிய ஓட்டுகளுக்கான ஏற்பாடு.
சம்பள உயர்வு; ஏற்கனவே உள்ள ஓட்டு வங்கியை காப்பாற்றும் முயற்சி.

ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்கள் வேலையை செய்ய தனக்கு கீழ் இருவரை வேலைக்கு வைத்துக் கொண்டு தாங்கள் வாங்கும் லஞ்சப் பணத்தில் 1/10 பங்கை சம்பளமாக கொடுப்பதால் ஏற்படும் மறைமுக வேலை வாய்ப்பு 5 லட்சம் என்று இந்த அல்லக்கை முண்டங்களுக்கு தெரியவில்லை.சாதனையில் இதையும் சேர்க்கட்டும்.
ஏற்கனவே அரசு வருமானத்தில் 90% அரசு ஊழியர்களு (பிரபுக்கள்) க்குத்தான் செலவிடப்படுகிறது. இன்னும் உள்ள 10% க்கும் ஆள் பிடித்துவிட்டால் ராஜா,மந்திரிகள், பிரபுக்கள், மக்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும். இன்றுகூட பெங்களுரில் பிரபுக்களிடம் இருந்து 15 கோடி கைப்பற்றப்பட்டது.
விளைவு: அடுத்து என்ன என்று பயந்து விடாதீர்கள். அரசாங்கத்திற்கு சம்பாரித்து கொடுப்பதை விட மக்களுக்கு வேறென்ன வேலை.சும்மா கிடைக்கும் வேலை வாய்ப்பை வேண்டாம் என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா?
முதுகெலும்பு உடையும் வரை வேலை செய்யமாட்டானா?

7) கைதிகளுக்கு தண்டனை ரத்து
கடனைத்தான் ரத்து பன்னுவாங்க தண்டனை ரத்து பன்றது ரொம்ப புதுசு. இது நீதிபதிகளுக்கும் மக்களுக்கும் செய்யப்படும் அவமரியாதை
விளைவு: அரசியல் கட்சி பெரிசுகள் நிறைய திரியுதுகள் அதனால் இனிவரும் காலங்களில் பிறந்தநாள் இறந்த நாள் தள்ளுபடி நிறைய கிடைக்க இருப்பதால் தண்டனையே இருக்காது.அப்புறம் எதையாவது தப்பு என்று சொல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா?

அரசு நீலப்படம் அரங்குகளில் திரையிட்டால் கூட்டம் கூடும், அதற்காக மக்கள் ஆதரவு என்று பொருள் கொள்ளமுடியுமா? துக்ளக் பாணியில் டிவி திட்டத்தை அறிவித்துவிட்டு, இருபது லட்சம் டிவியை கொடுத்து தமிழகத்தை இருளில் மூழ்கடித்துவிட்டு இன்னும் நாற்பது லட்சம் டிவியை கொடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? சுய மரியாதையை காப்பாற்ற போய் நாட்டின் மரியாதை காற்றில் பறக்கிறது.

8) டாடாவுக்கு 10,000 ஏக்கர் நிலம்.
நிலத்தின் மேற்ப்பரப்பில் தொழிற்சாலை வைத்து கொள்ள அனுமதிக்காத வங்க மக்கள்.
கடலில் கலக்கும் வீணாகப் போகும் நீரை தமிழனுக்கு விலை பேசும் கேரள மக்கள்.
சுப்ரீம் கோர்ட் அளித்த அனுபவ பாத்தியத்தை மறுக்கும் கர்நாடக மக்கள்.
அணை கட்டி கொடுத்து தண்ணீர் குடித்துக் கொள் என்று சொல்லும் ஆந்திரமக்கள்.
ஒரு ஏக்கர் பாலை நிலத்திலே பல லட்சம் சம்பாரிக்கும், இடமில்லா இஸ்ரேலியர்கள்.
இவர்களுக்கு இடையே சிரமப்பட்டு விவசாயம் செய்ய தமிழன் என்ன இளிச்சவாயனா? ஆகவே புதையலை (நிலக்கரி, TiO2) எடுத்துக் கொள் என்று இடத்தை அற்பத் தொகைக்கு விற்று விட்டு பெருந்தொகையை தரகாக அரசன் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் உலக மகா பெருந்தன்மைக்காரன் தமிழன்தான். நீர் என்பது (renewable resource)ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கபடுகிறது. கனிமப் பொருள் புதுப்பிக்கபடுவதல்ல என்பதை தமிழனுக்கு எதைக் கொண்டு அடித்து புரிய வைப்பது.

9) காவல் துறை பார்த்துக் கொள்ளும்
தமிழக பெற்றோர்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பினால் கைகாலை ஒடித்து அனுப்புகிறார்கள். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. (சென்னை)
வேலைக்கு அனுப்பினால் ஆள்பவரின் வாரிசுகள், சுடுகாட்டிற்கு அனுப்புகிறார்கள். (மதுரை)
மந்திரிகள் மக்களின் சொத்துக்களை அடாவடியாக பிடுங்கி பட்டா போடுவதற்கு காவல் துறை கை கொடுக்கிறது. (ஈரோடு)
தனி மனிதன் பெரும் தொகை கையில் வைத்திருந்தால் காவல் துறை பிரபுக்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். (கோவை)
காவலர்களோ தங்கள் தகுதிக்கு செக் போஸ்ட்களில் நின்று வழிப்பறி செய்து கொள்கிறார்கள் (மதுரை).
பாதுகாப்புக்கு காவல்நிலையம் செல்ல தமிழன் என்ன இளிச்சவாயனா? அங்கு கவுண்டர் போட்டு பணம் வசூல் செய்கிறார்கள். ஆகவே தாதாக்களிடம் செல்கிறான். தாதாக்களோ மாமூல் சதவீதக் குறைவினால் பிரபுக்களால் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள்.

10) கல்வித்துறை

கல்வியில் ஒழுக்கம் கெட்டுவிட்டது. மெக்காலேயின் அடிமைக்கான கல்வித்திட்டம் தொடர்ந்து பின்பற்றபடுகிறது. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து விட்டதால் மக்களுக்கு திண்டாட்டம் மந்திரிகளுக்கு கொண்டாட்டம்.

பள்ளி, கல்லூரிகள் லாபம் கொழிக்கும் தொழிற்சாலைகளாகி விட்டன.
கல்வியின் மூலம் கல்விக்குத்தான் நன்மை. ஆசிரியர்கள் ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள். சமுதாயத்துக்கு பயன் ஏதுமில்லை. தமிழகத்தின் உற்பத்தி திறனை முன்னேற்றும் விதமான கல்வி ஏதுமில்லை. தைவான், கொரியாவில் மதர்போர்டு செய்வதற்கு மட்டும் நூறு கம்பெனிகளுக்கு மேல் உள்ளது. இந்தியாவில் ஒன்றுகூட இல்லை.

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு லட்சம் பேர் ப்ளஸ்டூ கல்வி முடித்தும் அறுபதாயிரம் பேர் பொறியல் முடித்தும் வெளி வருவதற்கு தமிழன் தனது சொத்துக்களை விற்றும் பாடுபட்டும் 3000,00,00,000 மூவாயிரம் கோடி ஒரு வருடத்திற்கு செலவு செய்கிறான். இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கு முறையான ஏற்பாடு துளிகூட இல்லை. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒரு கண்துடைப்பு. கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது.

பொறியல் கல்லூரியில் சராசரியாக ஐந்து லட்சம் செலவழித்து நான்கு வருடம் முடித்துவரும் மானவன் வெளியில் வந்து ஐம்பதாயிரம் கட்டி மூன்று மாதத்தில் டிப்ளமோ தரத்தில் ஒரு கல்வியை பயின்றால் தான் வேலை வாய்ப்பு,அதுவும் அன்டை மாநிலத்தில். நான்கு வருடம் என்ன படித்தார்களோ? தமிழகத்தில் சொந்த செலவில் படித்துவிட்டு இங்கேயே செலவழிக்க வரிகட்ட தமிழன் என்ன இளிச்சவாயனா? கம்ப்யூட்டர் யுகத்தில் கம்ப்யூட்டருக்கான வேலை வாய்ப்பு மத்திய மாநில அரசுகளில் ஏதுமில்லை. அரசுக்கும் கம்ப்யூட்டருக்கும் வெகு....................... தூரம்.

11) சேது திட்ட ஆதரவு
பனாமா, சூயஸ் கால்வாய் வருவாய் பற்றிய புள்ளி விவரம் இவர்களுக்கு தெரியாது போலும். அதை சொன்னால் தமிழன் வாய் பிளந்து மயங்கி விடுவான். பின்னர் எளிதாக சேதுவில் தோண்டும் மண்ணை எடுத்து அவன் வாயிலும் உடலிலும் போட்டு மூடி விடலாம்.
ஆனால் அவைகளின் முதலீடும், பூகோள அமைப்பும் சேதுவுக்கு முற்றிலும்
சம்பந்தம் இல்லை. சேது ஒரு சுனாமியில் முற்றிலும் மறைந்துவிடும். ஒரு புயலுக்கு பாதி மேவிவிடும். ஏதுமில்லை என்றால் பத்து வருடங்களுக்கு ஒரு முறை 500 கோடி செலவழிக்க வேண்டும். இதை நம்பி ஒரு பெரிய உல்லாச படகு கூட வராது. கப்பல் எப்படி வரும்.
வருவாய் ஏதுமற்ற 4000 ஆயிரம் கோடியில் இத்திட்டம் தமிழகத்திற்கோ இந்தியாவுக்கோ இப்பொழுது தேவை இல்லை. இந்த பணத்தை கடலில் கலக்கும் மழைநீரை சேமிப்பதில் செலவழித்தால் நிலத்தடி நீராவது உயரும்.விவசாயம் பெருகும். அல்லது ஊரில் உள்ள ஆறு,ஏரி,குளங்களை தூர் வாரலாம். மழைக் காலத்தில் நகரத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க செலவழிக்கலாம். அல்லது தமிழகத்தில் சுங்கமில்லா சாலைகளை அமைக்கலாம் .

2 மறுமொழிகள்:

படித்துறை.கணேஷ் Wed Dec 24, 04:44:00 AM  

கோழித் திருடனுக்கு
குறைந்த பட்ச
ஜெயில் தண்டனை....
ஜெயிலில்
வாரம் ஒருமுறை
கோழிக்கறி !!

படித்துறை.கணேஷ்

Manoharan.K Wed Dec 24, 06:02:00 PM  

Naattamai, intha theerpa innum uraka tamilanuku uraika sollunga.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !