வியாசர்பாடி வில்லங்கமுத்து எழுதும் கடிதம்..
ஆகாசத்துல இருக்கும் நம்பியார் சாமிக்கு கன்னிச்சாமியான வியாசர்பாடி வில்லங்கமுத்து எழுதிக்கிற லெட்டர், மடல்,… கடுதாசின்னே வச்சிக்கலாம்.
சாமி, நமக்கு நேட்டிவ் மெட்றாஸ்தானுங்க. நம்ம நைனா டுமீல்குப்பம் முனியாண்டி மீன்பாடி வண்டி ஓட்டிக்கினுருந்தாரு. அவர் புள்ள நான் நாலெழுத்து படிச்சி இப்போ ஆட்டோ ஓட்டிக்கினுருக்குறேன். நாலாங் கிளாஸ் படிக்கிறப்போ ஒரு தீவாளி அன்னிக்கி தேவி தியேட்டர்ல 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பாத்தேன் சாமி. அப்பாலிக்கா டிவி பொட்டில தமிழ் சேனல் ஆரம்பிச்சப்போ, மொதப் படம் ஓம் படம்தான் சாமி. அன்னிக்கி லருந்து நமக்கு ஒன்மேல ரொம்ப இஸ்டம் சாமி. அப்பாலிக்கா, சினிமால வில்லனா ஆக்ட் குடுக்குற நீ, நெச வாழ்க்கைல வருசா வருசம் மலைக்கு போற நல்ல மனுசன், படா ஜென்டில்மேன்னு சோக்காளிங்க நம்ம கைல சொன்னாங்க சாமி. நமக்கு ஒன்மேல ரெஸ்பெக்ட் ரொம்ப கூடிப் போச்சி சாமி.
நமக்கு இரண்டு புள்ளிங்க சாமி. ஒண்ணு இரண்டாப்பு படிக்குது. இன்னொன்ணு எல்.கேஜி. படிக்குது. நம்ம சம்சாரம் கவர்ண்மெண்ட் இஸ்கூல்ல ஆயாவாக்கீது. ஏதோ பொயிப்பு ஓடிக்கினுருந்துச்சு சாமி. ஸ்டாண்ட்லக்கீற சோக்காளிங்கெல்லாம் வருசா வருசம் மலைக்கு போயிக்கினுருந்தாங்க. இந்த வருசம்தான் சரி அல்லாரும் போறாங்களே, நம்மளுந்தான் போயி பாக்கலாமேன்னு குமாராண்ட சொன்னேன் சாமி. அவன் குருசாமி கோயிந்தனாண்ட சொல்லி நமக்கு மாலை போட்டு விட்டாங்க சாமி. டெய்லி பூஜை, பாட்டுன்னு நல்லாத்தான் இருந்துச்சு சாமி. சுத்த பத்தமாகீறதுதான் என்னா சந்தோசமாகீது? குருசாமி சொன்னதுனால, பீடி குடிக்கிறதக் கூட ஸ்டிரிக்டா நிறுத்திப் போட்டேஞ்சாமி.
யாரு கண்ணு பட்டதோ? ரெண்டு நாளிக்கு முன்னால, குமாரு சவாரி போயிட்டு லேட்டா வந்தான். நான் நைட் சவாரிக்காக ஸ்டாண்டுக்கு போனவன், "இன்னாடா குமாரு, இம்மாம் லேட்டா வர்ற, பின்னால யாரு சம்சாரமா?"ன்னேன். பாக்குறேன், வேற யாரோ ஒரு பொம்பிளை உக்காந்துக்கீது. "யார்ரா இது"ன்னேன். "தேவியாண்ட நின்னுக்குனிருந்துச்சு. ரொம்ப நாளாச்சா, அதான்"னு இழுக்குறான். நான் மெர்சலாயிட்டேன் சாமி.
"அடப்பாவி, இன்னாடா இப்டி கண்ட்ரோல் இல்லாமக் கீர"ன்னு கொஞ்சம் சவுண்டாவே கேட்டேன். "அடப் போடா, கண்டரருக்கே கண்ட்ரோல் இல்லியாம், நமக்கு இன்னாத்துக்கு?"ன்னு நக்கலா சொல்லிக்கினு அப்பால போயிட்டான். இது யார்ரா இவன் கண்டரரு, பஸ் கண்டக்டரா, லாரி கண்டக்டரான்னு புரியாம விடிய விடிய ரோசிச்சிக்கினுருந்தேன்.
மறாநாள் காலைல குருசாமி கைல விசயத்த சொல்லி நியாயம் கேட்டேன். "இதல்லாம் கண்டுக்காத, நாம சுத்தமா இருந்தா அது போதும்."ன்னு குருசாமி சொன்னாரு. "அது சரி சாமி, இந்த கண்டரரு யாரு, அவரே கண்ட்ரோலா இல்லன்னு குமாரு சொன்னான்"னு கேட்டேன். "அப்டியா சொன்னான் அந்த கஸ்மாலம்? கண்டரரு ஐயப்ப சாமிக்கு பூஜை பண்றவரு. அவரப் பத்தி அப்டில்லாம் பேசக் கூடாது. நீ இந்த மேட்டர விடுப்பா. புதுசா ஒரு ஜேசுதாஸ் பாட்டு கேசட்டு வந்துருக்கு. கேட்டுப் பாக்குறியா"ன்னார். சரி விடு, குருசாமியே கண்டுக்கல, நமக்கு இன்னாத்துக்குன்னு நானும் விட்டுட்டேன்.
மறாநாள், ஸ்டாண்டுக்கு வந்து வண்டிய நிறுத்திக்கினு வெளிய வந்தேன். இரண்டு சின்ன பசங்க சிவப்பு சட்டை போட்டுக்கினு வந்து, "தோழர், இந்தப் பத்திரிக்கை வாங்கிப் படிச்சுப் பாருங்க. புதிய கலாச்சாரம், உழைக்கும் மக்களுக்கான பத்திரிக்கை"ன்னு இன்னா இன்னாவோ சொல்றானுங்க. சரி, உசுரக் குடுத்துப் பேசுறானுங்களே, அப்டி இன்னாதான் இருக்குன்னு பாக்கலாம்னு கைல வாங்கிப் பார்த்தேன். "மகரஜோதி பொய்! ஐஸ்லிங்கம் பொய்! பக்திப் பரவசமும் பொய்"னு டைட்டில் போட்டு அய்யப்ப சாமி படம் போட்டு வச்சிருக்கான். "இன்னா தம்பியிது, சாமியாண்ட வந்து இத்த குடுக்கிறீங்க?"ன்னு கேட்டேன். "இல்ல தோழர், நீங்க கோபப்பட வேண்டாம். உங்களப் போல ஆசாமிகள் படிக்கிறதுக்காகத்தான் இத கொண்டு வந்திருக்கோம்"னு ஒருத்தன் சொன்னான். சரி விடு, நமக்கு இன்னாவோ நேரம் சரியில்லனன்னு நொந்துக்கினு பத்து ரூபாயக் குடுத்து வாங்கினேன். ஆட்டோக்குள்ளாற போயி குந்திக்கினு அத்த படிச்சி பாத்தேன். இன்னாத்த சொல்றது, படா பேஜாரா எழுதிருக்கான் சாமி.
இது என்னா சாமி இது? இந்த கண்டரரு இம்மாம் மோசமானவனா? இது மெய்யாலுமே உண்மையா இல்ல பொய்யா? குருசாமிகிட்ட போயி கேட்டா இத்த கண்டுக்காதாம்பாரு. அதான் ஒனக்கு எழுதிக்கிறேன் சாமி. அத்த படிச்சிதுல இருந்து எனக்கு தூக்கமே வரல சாமி. வர வர ஏண்டா மாலை போட்டோம்குற மாதிரி இருக்கு சாமி. அதுனால, எனக்கு தெரிஞ்ச ஒரே நல்ல சாமி, யோக்கியமான சாமி நீ ஒருத்தர்தான். நீ ஆவி அமுதா மேல இறங்கியாவது இந்தப் பெரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லு சாமி.
என்றும் அன்புடன்,
நம்பியார் ரசிகன்,
கன்னிச்சாமி,
வியாசர்பாடி வில்லங்கமுத்து.
8 மறுமொழிகள்:
naatula intha maathiri boliyaa nirayaa irukaanunga villangamuthu...
yellarum pesurathu onnu seyurathu onnu... evanum unmayaa illa inga villangam..athunaala un polaba paarthukinu nermayaa iru vilangam. athu pothum antha kaduvuluku maalai, viratham yellam thevai illai kannu...
வணக்கம் தோழர்.
இந்த பதிவை எங்கேயிருந்து எடுத்து மீள் பதிவிட்டுள்ளீர்கள் ?
அதை குறிப்பிடவே இல்லையே ?
வணக்கம் தோழர்.
இந்த பதிவை எங்கேயிருந்து எடுத்து மீள் பதிவிட்டுள்ளீர்கள் ?
அதை குறிப்பிடவே இல்லையே ?
Got a mail from Keetru google group. So i did not mention where i copied from.
Vaazhga Tamiludan,
Nilavan
//So i did not mention where i copied from.//
அற்புதம்ங்னா!
Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!
Discount altace Order doxycycline No prescription voltarol 50mg toprol xl Low price arimidex Cheap aleve
Post a Comment