மதங்கள் மறந்து மனிதம் வளர்ப்போம் !

பார்த்ததும்..ஈர்த்ததும்...(2)


மும்பை வழக்கம் போல் தாக்குதலாகி இருக்கிற்து.. அரசியல் கட்சிகளும் வழக்கம் போல் ஓர் அறிக்கை, தீவிரவாதிகளுக்கு ஒரு கண்டனம், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை பதவி விலக வைக்கும் கோரிக்கை, மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டு பணிக்குச் செல்லும் வழக்கமான நிகழ்வுகளுக்கு மேலே “பொறுத்தது போதும்” என்னும் சிறியதொரு மாற்றங்களைக் காண முடிகிறது. நடுவண் அரசும் இம்முறை தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை குற்றம் சாட்டி தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. தீவிரவாதத்தின் தீவிரத்தை நேரலையில் ஒளிபரப்பி மக்களுக்கு உண்மை உணர்த்தி உணர்ச்சிகளை எழுப்பி குடிமகனின் கடமை என்னவென்பதை உணர்த்தி பெரும்பங்கு ஊடகங்களுக்கு உண்டென்றாலும் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களை படமெடுத்து தப்பி வந்தவர்களை தாவி பிடித்து பேட்டி கண்டுகொண்டு ராணுவ நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பி தீவிரவாதிகளுக்கு உதவுவது மாதிரியான செயல் என்னவென்று தெரியவில்லை. இம்மாதிரியான தருணங்களில் நேரலைகளை தவிர்ப்பது நல்லது, அல்லது தடை செய்ய வேண்டும் தான்.பாதுகாப்பு படையினரும் திறமையாகப் போரிட்டு சிலர் உயிரையும் தியாகம் செய்தது பெரும் வருத்தமளிக்கிறது. பல்வேறு தருணங்களில் சிறப்பாகப் பணியாற்றிய மிக முக்கியமான உயர் அதிகாரிகளும் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தீவிரவாதிகள் மிக நுணுக்கமாய் நாட்டில் உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் செய்யும் அளவுக்கு நமது பாதுகாப்பு இருப்பது மிகுந்த வேதனை தான். நாட்டில் பாதுகாப்புக்கு மட்டும் செலவிடப்படும் கோடிகளை என்ன பண்ணுகிறார்கள் என்ற கேள்வியும் வருகிறது. நீர் வழியே ஒரு நாட்டிற்குள் நுழைந்து நாடு முழுவதையும் சுமார் 60 மணி நேரம் பதட்டத்தில் வைக்கும் இந்த புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான தருணங்களில் சிறப்பாக செயல்பட எல்லா காவல் துறை அதிகாரிகளால் முடியுமா? துப்பாக்கியை பெரும்பான்மையானவர்களுக்கு இயக்கவே தெரியாது. தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட வகை துப்பாக்கிகளால் தான் இயக்க முடியும்.


தீவிரவாதம் ஆரம்பிக்கப்படும் போதே அதாவது சுட ஆரம்பிக்கும் போதே தகர்த்தெறிந்திருந்தால் பெரியளவு பாதிப்புகள் கட்டுப்படுத்த முடியும். ஆனால் காவல் துறை அதிகாரிகளே துப்பாக்கியைத் தூக்கி கொண்டு ஓடி ஒழியும் எங்கே காண்பீர்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ? சோம்பேறிகளாய், பெரும் தொப்பை உடையவர்களாய், மாமூல் பண்ணவும், அப்பாவி மக்களை மிரட்ட மட்டுமே தெரிந்த காவல் துறை என்ன செய்ய முடியும் ? அவர்களை ஆளும் அரசால் தான் என்ன செய்ய முடியும்?


தீவிரவாதம் எங்குமே எதிர்வினையாகவே கொள்ளப்படுகிறது. அதாவது முன்னால் செய்த நிகழ்வுகளின் எதிர்வினைகளே ஆகும். சிறுபானமையினருக்கும், பெரும்பானையினருக்கும் ஏற்படும் சிறு சிறு தவறுகள் பெரியனவாகி சகிப்புத் தன்மையின்றி மக்களை சவப்பெட்டிக்குள் தள்ளுவதற்கான ஆயத்தங்களை மனிதர்களின் மனங்களே வழி செய்கிறது.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்பது மாதிரி மற்றொருவர் வழிபடும் கோயிலை இடிப்பானேன் ? பெரும்பான்மையினர் நம்பும் இடத்தை விட்டுக் கொடுத்து தனது பண்பை உலகிற்கு உணர்த்த சிறுபான்மையினர் வழிவகுத்திருக்கலாம் ? எங்கோ தனது மதம் அழிந்து விடுமோ என்றெண்ணியே இளரத்தங்களில் வன்மை வளர்த்து நெருப்பு வளர்த்து தீவிரவாதத்தை வளர்ப்பது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ எல்லாமே தீவிரவாதம் தான்.
கண்முன்னே காணும் ஒரு நிகழ்வுக்கு உனது ரத்தம் துடித்து அந்நிகழ்வுகளின் காரணகாரர்களை களைந்திட உன் உள்ளம் துடிக்குமாயின் தீவிரவாத நபர் உன்னைக் கையாண்டால் நீயும் ஒரு தீவிரவாதிதான். உனக்கு கிடைத்திடாத ஒரு தீயவழி எங்கோ வறுமையிலிருக்கும் இளைஞனுக்கு தீவிரவாதியாகும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

இதில் அரசியல்வாதிகள் பண்ணும் அக்கிரம அநியாயங்கள் வெட்கித் தலைகுணிய வைக்க வேண்டியவை. எங்கும் எதிலும் எவ்வளவு ஓட்டுகள் விழும் என்ற எண்ணம் கொண்ட ஓட்டுப்பொறுக்கிகளாக இருப்பது தான். ஒவ்வொரு நிலையிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள் அரசியல் ஓட்டுக்களுக்காக இயக்கப்படுகின்றன. அறுபது நாட்களுக்கொருமுறை அழைக்காமல் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்னும் அளவுக்கு பாதுகாப்பில் அவ்வளவு ஓட்டை. அவ்வளவையும் புறந்தள்ளி விட்டு எந்த கட்சியை சமாதானப்படுத்தலாம் எங்கே ஓட்டைப் பொறுக்கலாம் என வழக்கமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவே முயல்வதில்லை. மக்களுக்கான அரசு என்பது போய் ஏதோ ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு தள்ளவது தான் அரசு என்பதில் தான் குறியாயிருக்கிறது.ராமனோ, கிருஷ்ணனோ, விநாயகனோ, யேசுவோ, அல்லாவோ எல்லாமே கடவுள் தான்.. அவர்களை நாம் யாரும் பார்த்ததில்லை ஆனால் அவர்களின் பெயரில் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறோம்.. மதங்களை நம்பி மனிதம் அழியலாமா? மதங்களை மறப்போம், மனிதம் காப்போம்.. !

2 மறுமொழிகள்:

Manoharan.K Fri Dec 05, 12:26:00 PM  

Dr. Kamalhassan told "manithanukum yaanaikum 'matham' pidithu ponaal ooru alinthuvidum"....endru
but at the same time "matham" piditha yaanaikalai kandu odinaal viratti kondey irukum... matham piditha yaanai ethirthu kolvom.

"we need a war against terrorists(pak), not against any religions"

Nilavan Fri Dec 05, 12:37:00 PM  

வாதிகளுக்கும், தீவிரவாதத்துக்குமான பொதுவான கருத்து இது..

போர் கொள்ளும் தருணம் தற்சமயம் அல்ல.. பாதுகாப்பை பலப்படுத்தி எதிரிகளுக்கு தக்க பாடம் கொடுப்பதே நன்று..

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !