’சற்றே பருத்த தனம்..’

”பருத்த தனம் வேண்டும்” எனப் பாடிய அம்பிகாபதியின் நிலை வேண்டாம் என்னும் வரிகளை உடைய நண்பரின் கவிதையை வாசிக்க நேர்ந்தது. என்ன என வினவிய போது ”தனம்” எனும் சொல் மார்பகங்களைக் குறிப்பது என அறிந்தேன்..

காதலர்களுக்கு எடுத்துக்காட்டாக அம்பிகாபதி-அமராவதி எனச் சொல்லக் கேட்டதுண்டு. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.. இருந்தாலும் ஒரு சிறு சுருக்கம் அறியாதவர்களுக்காக..


அம்பிகாபதி அமராவதியை காதலிப்பதை தெரிந்து கொண்ட குலோத்துங்க சோழ மன்னன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம் எனத் தீர்மானிக்கிறான். குலோத்துங்க சோழன் அம்பிகாபதியை சிற்றின்ப ( காமரசம் ததும்பும்) கவிஞன் என விமர்சிக்கிறான், பின் அம்பிகாபதியை நூறு பாடல்கள் வரிசையாக காமரசம் ததும்பா பாடல்களை பாட கட்டளையிடுகிறான். அம்பிகாபதி பாட முடியாத பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் கட்டளையிடப்படுகிறது.

பாட ஆரம்பித்த அம்பிகாபதி முதலில் செய்யுள் பாடலை பாடி பின் கட்டளையிடப்பட்ட பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாட ஆரம்பிக்கின்றான். திரைமறைவில் இருந்து பாடலை எண்ணிக் கொண்டிருந்த அமராவதி செய்யுள் பாடலையும் சேர்த்து எண்ணிக் கொண்டிருந்தாள். இதில் 99 வது பாடல் முடித்தவுடன் நூறு பாடல்கள் முடித்துவிட்டதாக எண்ணி உணர்ச்சிப் பெருக்கில் அம்பிகாபதியை நோக்கி ஓடி வருகிறாள்.

பேரழகுடன் ஓடி வரும் அமராவதியைக் கண்ட அம்பிகாபதியும் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு கீழ்க்கண்ட பாடலை நூறாவது பாடலாக பாடி விடுகிறான். இப்பாடலில் காமரசம் கலந்து இருப்பதால் சோதனையின் விதிப்படி அம்பிக்காவது வெற்றி பெறவில்லை.. ஆதலால் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் அறிவு மழுங்கியதன் பலன் அம்பிகாபதிக்கு கிடைத்தது.

அம்பிகாபதி பாடிய அந்த நூறாவது பாடல்

சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட - துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !