திலீபன் : அகிம்சைக்கு உணவு

திலீபன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், பார்த்திபன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் முக்கிய உறுப்பினராக இருந்தவர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அமைதியை ஏற்படுத்தப் போகிறோம் என்ற புறப்பட்ட இந்தியப் படையினரின் அத்து மீறிய செயல்களையும் கண்டு பொறுக்காது அவர்களிடம் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 1987 செப்தம்பர் 15ம்  தேதி இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் வழியில் நீர் அருந்தா உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் திலீபன்.

இந்திய சுதந்திரத்தின் அடிப்படையே அகிம்சை தான். இலங்கையிடம் எதிர்பார்க்கமுடியாத பற்றுதலை இந்தியா கவனத்துடன் தமக்குச் செய்யும் என்னும் அரிய நம்பிக்கையுடன் இந்திய இலங்கை ஒப்பந்தித்தின் ஒப்புக்கொள்ளப்பட்டவைகளைத் தான் செயல்படுத்துமாறு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. திலீபன் நெஞ்சுறுதியுடன் நீராகாரம் ஏதுமின்றி சாகும்வரை உண்ணாவிரதம் என்னும் சீரிய கொள்கையின் படி தொடர்ந்து மேற்கொண்டார். அவரின் கோரிக்கைகளுக்கு இந்திய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை, பார்த்திபனும் உறுதி தளராது கடும் பசியில் பன்னிரண்டு நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது.ஐந்து அம்சக் கோரிக்கை

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும்ஆனால் போராட்டத்திற்கு பசி வந்து அதற்கு உணவாக திலீபனின் உடல் உணவாக 1987 செபதம்பர் 26ல் எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆம், கேட்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அறிக்கையோ, பேச்சு வார்த்தையோ ஏதுமில்லாமல் திலீபன் வீரமரணம் அடைந்தார். அவரின் மரணம் தமிழின போராட்டங்களுக்கு ஒரு மைல்கல். அத்துடன் அகிம்சையின் மூலம் ஒரு போராட்டம் நடத்த முடியாது என்று உலகிற்கு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் இறக்க காரணமாக இருந்த இந்திய அரசிடமே விடுதலைப் புலிகள் போர் புரிந்தது அம்மாதிரியான ஒரு தருணத்தில் தான்.

திலீபன் பாடல்!

ஈழம் எம் நாடெனும் போதினிலே
ஒரு ஈகம் பிறக்குது வாழ்வினிலே
திலீபன் தந்த இவ் உணர்வினிலே
தாகம் வளருது நாட்டினிலே

வேகம் கொண்டதோர் பிள்ளையவன்
வேதனை வேள்வியில் உயிர் எறிந்தான்
தாகம் தமிழீழம் ஒன்றே என்று
மோகம் கொண்டு தன் உடல் தகித்தான்

அந்நியர் காலடி எம் மண்ணில்
ஆக்கமாய் என்றுமே ஆகாது-எனப்
புண்ணியவான் இவன் கூறிவட்டு
புதுமைப் புரட்சியில் விழி சாய்த்தான்.

தொட்டு நாம் மேடையில் ஏற்றி விட்டோம்
உடல் கெட்டவன் பாடையில் இறங்கிவந்தான்
பட்டறிவு இதுவும் போதாதா
நம் மக்களும் முழுதாய் இணைவதற்கு

கட்டையிலே அவன் போனாலும்
வெட்டையிலே உண்மை எடுத்துரைத்தான்
பட்டை யடித்த பாரதப் படையினரின்
கொட்டமடக்கிட வழி சமைத்தான்.

நெட்ட நெடுந்தூரம் இல்லை ஐயா- வெகு
கிட்டடியில் எம் வெற்றி வரும்.
கொட்டமடித்தவர் எல்லோரும்-எம்
காலடி தொட்டிடும் வேளை வரும்

தீட்சண்யன்
15.9.94

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !