பகவத் கீதை : சொல்வது ஒன்று செய்வது தவறு !
பொது நல வழக்கு, மன்னிப்பு கோரி போராட்டம் என்பது சிலருக்கு வீண் புகழைத் தேடுவதற்காகவும், பெரிய மனிதரை ஒருவரை எதிர்த்தால் தனக்கும் கொஞ்சம் பேர் கிடைக்கும் என்பது மாதிரியான நிகழ்ச்சிகள் பெரும் வாரியாக ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்து விட்டன.
ஒரு சிலர் தான் எந்த கருத்தை முன் வைத்து மன்னிப்பு போராட்டம் நடத்துகிறோமோ அதற்கான அர்த்தத்தையே மறந்து விட்டு அறிவிப்பு, போராட்டம் எனச் செல்வதுதான் பெரும் கேலிக் கூத்து..
உதாரணத்துக்காக இந்து முன்னணியும், யாதவ மகா சபையும் ரஜினி பகவத்கீதையை அவமானப் படுத்தியதாக மன்னிப்பு கேட்டு அறிவிப்பு செய்திருந்தன. மன்னிப்பு கேட்காத பட்சத்தில் ரஜினி வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தன.
அதன் நோக்கம் என்ன ? கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே பகவத் கீதை மொழியை மாற்றி பலனை எதிர்பார் என்று சொல்லாதே என்பது தான். பகவத் கீதையின் அந்த தெய்வீக மொழியில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் ரஜினி கூறியது தவறு என்ற தாங்களின் கடமையை மட்டும் தானே செய்திருக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்ற பலனை ஏனய்யா எதிர்பார்க்கிறீர்கள் ?
பகவத்கீதையை அவமானப்படுத்தியதாக கூறும் நீங்களே பகவத்கீதையை அவமானப்படுத்தியது போல் ஆகாதா ?
இருவேறு கருத்துக்கள் முரண்படலாம்... ஆனால் ஒரு கருத்தே முரண்படலாமா ?
சிந்திப்பீர்..
1 மறுமொழிகள்:
மச்சான் , ரஜினி கஜினி மாதிரி அவரு என்னா சொன்னாரு என்பத அவரு அடுத்த வினாடியெ மரந்த்து விடுகுரார்.
Post a Comment