ஈமு கோழிப்பண்ணை

அதிக வருவாயை ஈட்டித்தரும் ஈமு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணைத் வைப்பது தொடர்பான பயிற்சி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்படுகிறது.

ஈமு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை தொழிலுக்கான வாய்ப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2008 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் டாக்டர் பி.தங்கராஜ், ஈமு கோழி வளர்ப்பு தொடர்பு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஈரோடு, புதுக்கோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஈமு கோழிகள் வளர்க்கப்படுவதாகவும், கொழுப்புச்சத்து குறைந்த, புரதச் சத்து அதிகமுள்ள ஈமு கோழி இறைச்சி அனைவருக்கும் நல்லதும் என்றும் குறிப்பிட்டார்.

சாதாரணக் கோழிகளுடன் ஈமுக் கோழிகளை விவசாயிகள் வளர்த்தால் நல்ல வருவாயைப் பெறலாம் என்று யோசனை தெரிவித்த துணைவேந்தர் தங்கராஜு, 600 முதல் 800 சதுர அடி நிலத்தில் ஈமு கோழிப்பண்ணை அமைக்கலாம் என்றார்.

ஈமு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை வைப்பது தொடர்பான பயிற்சி, புதுக்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களை அறிய 04322- 271443 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !