தந்தி அனுப்புங்கள் நண்பர்களே !


புகைப்படம் பார்த்தே நெஞ்சம்
புதைகிறேதே..

புதுவழி வேண்டி மனம்
புகைகிறதே

குண்டு மழை பொழிந்து
கூண்டோடு அழிக்கும்
இழிசெயல் இன்றே
ஒழிந்திட வழி வேண்டும்....

இரக்கமில்லா மனிதர்களின்
அரக்க ஆற்றலிருந்து
விடுதலை பெற வழி வேண்டும்..."இலங்கையில் இடைவிடாது நடக்கும் ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழர்களை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில், இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்"

என்னும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க...

தந்தி அனுப்புங்கள் நண்பர்களே...

The Prime Minister's Office, ('PMO')
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 011

2 மறுமொழிகள்:

S.Lankeswaran Thu Oct 09, 07:33:00 PM  

மனதை பதர வைக்கும் காட்சிகள். போரின் கொடூரத்தை இணையத்தின் வாயிலாக நிழற்படத்தில் காட்டியதற்கு மிக்க நன்றிகள். தோழரே தங்கள் வலைப்பதிவில் பதியப்பட்டுள்ள இந்நிழற்படங்களை நான் பிரதியெடுத்து மற்றவர்களுக்கும் அனுப்பலாமா?

Nilavan Fri Oct 10, 08:29:00 AM  

இலங்கேஸ்வரருக்கு நன்றிகள்..

தாராளமாய் புகைப்படங்களை பயன்படுத்துங்கள் நண்பரே...
( நானும் எங்கோ இருந்து சுட்டது தான்..)

வாழ்க தமிழுடன்,
நிலவன்

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !