மோதலில் விழுந்தேன்..


காதலில் விழுந்தேன் 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்க பிரசாத் இயக்க 'பாய்ஸ்' நகுலன் கதாநாயகனாக நடிக்கிறார். சன் குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இருக்கும் பகையும், அடிக்கடி நடக்கும் சண்டைகளும் மக்களுக்கு தெரியாமல் இல்லை.. ( கலைஞர் பாணிதான்.....)
ஒருவர் தொழிலில் ஒருவர் காலை வாருவது, ஒத்துழையாமல் இருப்பது என எத்தனையோ சச்சரவுகள் தாண்டி குடும்பம் தாங்கி வருகிறது.

காதலில் விழுந்தேன் 'நாக்கு முக்க' பாடல் பெரும் பிரபலமடைந்து பெருத்த எதிர்பார்ப்புடன் தமிழகமே தாயாராகிக் கொண்டிருக்கிந்தது. அதிலும் இப்பாடல் கானா பாடலால் மதுரை மாநகரம் பெரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருந்தது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான 'குருவி' க்கு எந்தவித தடங்கலில்லாமல் வெளிவந்து, தங்கள் பாசத்தைக் காட்ட பேனர் வைத்து உற்சாகப் படுத்தின உடன்பிறப்புக்கள். இன்று சன் திரைப்படம் தயாரிக்கிறது என்றதும் அதனை மிரட்டி பணிய வைப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. தமிழ் திரைப்படம் உலகமெலாம் திரையிடும் பொழுது பெங்களூரில் திரையிடவில்லை எனில் இந்தியாவில் இருக்கிறோமோ என சந்தேகம் வரும் பொழுது, மதுரையில் திரையிடவில்லை எனில் நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் வருவது இயல்பே.

இதையெல்லாம் பார்த்து நடவடிக்கை எடுக்காமல் "படத்தை மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் திரையிடலாம். இதுதொடர்பாக எந்தவித கட்டுப்பாடும், தடையும் விதிக்கப்படவில்லை" என கூறிவிட்டு அமைதிகாப்பது எப்படி அய்யா நியாயம் ?

2 மறுமொழிகள்:

Manoharan.K Mon Sep 29, 12:57:00 PM  

ada pongadaaa...neenga epdi sandai pottalum...naanga padatha thirudu DVDla paarthuruvom.... naanga padam paarkuratha evanaalum nirutha mudiyaathu

Anonymous,  Sat Oct 04, 05:56:00 PM  

This is too tooo much. Alagiri is doing everything over.... I am from Madurai and I got chance to go Meenakshi Bazar for watch purchase. I shocked to see that all DVD shops are giving "Kaathalil Vilunthaen" DVD and CD as free of cost. This is horrible.

He can fix flex boards in entire Madurai for his birthday and his son's birthday. But others should not do that because flex boards are banned. Funny Government!

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !