தாலி இல்லை ... ஆனால் 'தாளம்' உண்டுஇம்மாதிரியான கிளுகிளுப்பான விடயங்கள் சுவாரசியத்தைக் கொடுக்கும். இப்பதிவு உங்களிடம் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு அல்ல.

தாங்களும், தாங்களின் சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க உங்களை சுதாகரிப்பாக்கவே இந்த பதிவுகள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.


நட்புடன் நிலவன்.
கொஞ்சம் மனச திடப்படுத்திக்கிட்டே படிங்க... .

குமுதம்.காம் - லிருந்து ....

வேளச்சேரி அபார்ட்மெண்ட். பத்தாவது தளம். டி.வி.யின் மெகா ஸ்கிரீனில் இரைச்சலாய் ஹாலிவுட் நடிகர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருக் கிறார்கள். ``அரேன்ஜ் பண்ணிட்டியா ராகுல்...'' சோப்புநுரையுடன் பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கிறாள் அந்த இளம்பெண்.

``ம்... சொல்லியாச்சு லேகா. இப்போ வந்துடும்.'' லேப்டாப்பை தட்டிக் கொண்டே `கோக்' உறிஞ்சுகிறான் அந்த மீசை மழித்த இளைஞன்.

``ஏண்டா வரும்போதே `காண்டம்ஸ்' வாங்கணும்னு தெரியாதா?''


ஃப்ரிட்ஜில் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு விளையாட்டாக இன்னொருவன் அடிக்கப் பாய்கிறான்.

செல்போனில் தீவிரமாய்ப் பேசிக்கொண்டே கதவைத் திறக்கிறாள் நைட்டி அணிந்த இன்னொரு யுவதி. வெளியே வாட்ச்மேன் பல் தெரிய சிரிக்கிறார். காண்டம்ஸ் பாக்கெட்டுகள் கைமாறுகின்றன. அழுக்குப் பாக்கெட்டில் ஐநூறு ரூபாயை பத்திரப்படுத்துகிறார் அந்தக் கிழட்டு வாட்ச்மேன். கதவு சாத்தப்படுகிறது. கொண்டாட்டங்களுக்கு அறிகுறியாய் மெல்லியதாய் உள்ளே சில சில `கிளுகிளு' சப்தங்கள்.

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.

லிவிங் டூகெதர். `தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த `ஜஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.

``லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. `லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல. நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.

வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.

பெரும்பாலும் இந்த சாஃப்ட்வேர் குடும்பங்கள் பத்தாவது மாடியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் யாருமே வந்து பார்க்க சிரமப்படுகிற உயரம் என்பதால் இந்த வசதி. பக்கத்து குடும்பங்களுக்கு பகலில் வேலையென்றால் இவர்களின் வேலையோ இரவு நேரத்தில். இந்த ஷிஃப்ட் முறையும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் சல்லாபங்களுக்கு நிறையவே கை கொடுக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் வெகுதூரத்தில் இருக்கிறார்கள். மாத வாடகை இருபதாயிரமாக சுலபத்தில் கிடைப்பதால் பிரச்னைகள் ஏதுமில்லை.

வீடு பார்ப்பதில்தான் இந்த `லிவிங் டூகெதர்' வில்லங்கம் முளைக்கிறதா என்றால் அதைத் தவிரவும் வேறு காரணங்களைச் சொல்லி நம்மை மிரள வைக்கிறார்கள்.
``எங்கள்ல பல பேருக்கு ட்ரிங்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கு. இதுல பொண்ணுங்களும் தண்ணி சாப்பிடுவாங்க. பாய் ஃப்ரெண்ட்ஸ் வச்சுக்கறது, கேர்ள் ஃப்ரெண்ட்ஸோட `டேட்டிங்' போறதுனு எல்லாமே உண்டு. தனியா இருந்தா எதையுமே அனுபவிக்க முடியாது. அதனாலதான் இந்த அபார்ட்மெண்ட் டெக்னிக். வீக் என்ட் சமயத்துல யாரும், யாரையும் கூட்டி வரலாம். பார்ட்டி வைச்சுப்போம். உங்ககூட என்னால தாலிகட்டி வாழ முடியுமான்னு தோணலை. இதுவே சந்தோஷமா இருக்கு. இப்படியே கொஞ்ச நாளைக்கு இருப்போம்''னு பொண்ணுங்களே சொல்றாங்க. ஸோ... அவளுக்கு கல்யாணம் ஆகுற வரை அல்லது எனக்கு பொண்ணு பார்க்குற வரையில ஒன்னா இருக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.'' கூலாகச் சொல்கிறார் கௌதம்.

மதுரையைச் சேர்ந்த வைத்தியநாதனை இந்தக் கலாச்சாரம் ரொம்பவே பாதித்திருக்கிறது. காரணம் அவரது இளைய பெண் அனுஷா. அனுஷாவுக்கு சென்னை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. திடுதிப்பென்று மகளைப் பார்க்க சென்னையில் உள்ள வேளச்சேரிக்கு போயிருக்கிறார் அந்த அன்பு அப்பா. வீட்டிற்குள் பீர் பாட்டில்கள் உருண்டு கிடக்கின்றன. ஒரு இளைஞன் அரை மயக்கத்தில் இடுப்பிலிருந்து நழுவின பேண்ட் சகிதமாய் கட்டிலில். அப்பா முகத்தில் அதிர்ச்சி. அனுஷாவிடம் பதட்டம். ``நம்ம சுகுணாவோட தம்பிதான். இவன்... இண்டர்வியூக்காக வந்திருக்கான்...'' ``பார்த்து இருந்துக்கோ அனு...'' அவ்வளவுதான். அவர் புறப்பட்டு விட்டார். அதே வருடத்தின் இறுதியில் ``அப்பா எனக்கு கல்யாண மாயிடுச்சு...'' என்று ஒரு இளைஞனுடன் ஜோடியாக வந்து நின்றிருக்கிறாள் அந்த செல்ல மகள். முன்பு, கட்டிலில் அரை குறையாய்க் கிடந்த அதே இளைஞன்தான் மாப்பிள்ளை.

``லிவிங் டூ கெதர்' விஷயத்துல நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்ல. ரெண்டு பேருமே மேஜர். இது தவிர பணிமாற்றம், கல்யாணம் நடக்கிற வரை என சில `லிமிட்ஸ்' வைச்சுகிட்டு ஒண்ணா இருக்காங்க. ப்ளாக்மெயில் நடக்கும் போதுதான் இதுல நிறையப் பிரச்னைகள் ஏற்படுது. `பொஸஸிவ்' காரணமா இதுல நடக்குற தற்கொலைகளும் அதிகம்'' என்கிறார் அடையாறு துணை கமிஷனர் ஷ்ரீதர்..


டாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்)


ஆண்களும் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர்&ஆக இருப்பது இப்போது பெருகிவர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மூலகாரணமாக இருப்பது ஆண்கள்தான். இந்த விஷயத்தில் பெண் மூளைச்சலவை செய்யப்படுகிறார். தன்னோடு நெருங்கிப் பழகும் ஒரு பெண்ணிடம் ``எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கையில்லை. உன்னிடம் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். தாலி என்கிற சம்பிரதாயமும் கல்யாணம் என்ற சடங்கும் நமக்கு எதற்கு? என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? நம்மால் ஒரே வீட்டில் எந்தத் தப்பும் செய்யாமல் நண்பர்களாக வாழ முடியும்'' என்றெல்லாம் பேசி சம்மதம் பெற்று விடுகிறார்கள். அதற்குப்பின் ஆடம்பர வாழ்க்கை மோகத்தில் பெண்கள் தண்ணி அடிப்பதும், பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வதும், பின்னர் இன்னொரு நண்பர் கிடைத்ததும் பழைய ஆண்/பெண் நண்பர்களைக் கழற்றி விடுவதும் சகஜமாகி விடுகிறது

17 மறுமொழிகள்:

mraja1961 Sat Sep 20, 11:30:00 PM  

என்ன கொடுமை இது தமிழ் நாடு தமிழ் கலாச்சாரம் எங்கே போயீகொண்டிருக்கிறது கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.

அன்புடன்
மகாராஜா

Nilavan Sun Sep 21, 07:05:00 AM  

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்" என்னும் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு வேளை, "கூடி வாழ்" ன்றதை தப்பா புரிஞ்சுகிட்டாய்ங்களோ ?

Nilavan Sun Sep 21, 07:09:00 AM  

இம்மாதிரியான கிளுகிளுப்பான விடயங்கள் சுவாரசியத்தைக் கொடுக்கும். இப்பதிவு உங்களிடம் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு அல்ல.

தாங்களும், தாங்களின் சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க உங்களை சுதாகரிப்பாக்கவே இந்த பதிவுகள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.


நட்புடன் நிலவன்.

Manoharan.K Sun Sep 21, 11:42:00 AM  

"but.. why ithelaam namma vaalgayula nadaka maatinguthu vijay :( ...?"

Nilavan Sun Sep 21, 12:01:00 PM  

மாப்பு நீ அடங்க மாட்டே போலிருக்கே !

வேணும் ஒரு விளம்பரம் போடு இங்கே !

Nilavan Sun Sep 21, 12:03:00 PM  

// வேணும் ஒரு விளம்பரம் போடு இங்கே ! //

மன்னிக்கவும். வேணும்னா ஒரு விளம்பரம் போடு இங்கே ...

Manoharan.K Sun Sep 21, 12:41:00 PM  

Wanted !! Roommate !.. Only for Girls.
A room with kitchen, hall, toilet and one "BedRoom"(twobeds) and one smart guy.

Call - 9901506118

(hee..hee.... intha vilambaram pothumaa maabla)

Nilavan Sun Sep 21, 01:11:00 PM  

//

A room with kitchen, hall, toilet and one "BedRoom"(twobeds) and one smart guy.

//

கூடவே எய்ட்ஸ் வரும் பரவாயில்லையா ?!

Hariharan Mon Sep 22, 12:50:00 PM  

Very irritating to hear those things... yen appa adikkadi solvaar: Pengalai oru level varaikkuthaan veliyil vida vendum endru......I was fighting with him that Aanum ponnum onnuthaan, ethukkaaga avangala mattum ippidi vathaikkireenga....but ithayellaam paakkum podhu ethirkaalatha nenachu romba bayamaa irukku........eppidi naama namma kulandhaigala (Expecially Pen kulandhai) valakka pogiromo endru..... :(((

neenga enna ninakkireenga idha pathi Vijay?

Nilavan Mon Sep 22, 03:18:00 PM  

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அரிகரன்,

உங்கள் தந்தை கூறுவது மிகச்சரி.

ஆணும் பெண்ணும் ஒன்று தான். ஆணுக்கு கிடைக்கிற உரிமைகள் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் தான். ஆனால் ஆண் ஒருவன் கிடைக்கின்ற சுதந்திரத்தில் தவறேனும் ஏற்படும் சமயத்தில் அவன் அடையும் பாதிப்புகள் மிகக் குறைவு. ஆனால் பெண் ஒருவள் சிறு பிழை ஏற்படின் அவளால் அதிலிருந்து வெளிவருமுடியா துன்பம் ஏற்பட பெரும் சாத்தியமுள்ளது. ஆக வயதுப் பிரச்சனையால் ஏற்படும் இக்கொடுமைகளிடமிருந்து பெண்களை காக்க வேண்டியது பெற்றோரின் கடமை தானே ?

பெண் ஒருவள் தனனை முழுதாய் புரிந்து கொள்வது நல்லது. தானும் இம்மாதிரியான இன்பத்தை அனுபவித்தாலும், தான் போகப் பொருளாய் ஆண்களால் பயன்படுத்தப் படுகிறோம் என்பதை உணர்ந்து நடப்பது நன்று. ஆனால் எதற்கும் கவலையின்றி, எப்படியும் வாழலாம் எனும் மனநிலையில் பணம் என்ற முதலையின் பிடியில் மாட்டிக்கொள்ளும் பெண்களை என்ன வென்று சொலவது ?

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதும், வாழ வைப்பதும் பெரும் சவாலாகத் தான் அமையும் என்பதில் சந்தேகமே யில்லை. ....


வாழ்க தமிழுடன்,
நிலவன்

Govind Mon Sep 22, 04:36:00 PM  
This comment has been removed by the author.
Govind Mon Sep 22, 04:37:00 PM  

Guys,

This is not only happen with rich(IT) people. Where ever people are corrupted there and all its happening. We cannot do anything.. As somebody said discipline should come from inner heart. Otherwise no one can change this bullshit things. For example if you take a girl from poor family or middle calls they have one prepaid cell phone and have one or more boy friends, they enjoy as much as possible and keep them busy as much as possible.. So take it easy and carry on...

Regards,

சிவசுப்பிரமணியன் Tue Sep 23, 09:58:00 AM  

வீட்டை விட்டு தனியா இருக்கிறதுனால கிடைக்கிற கட்டுப்பாடில்லா சுதந்திரம்.. மேற்கத்திய கலாச்சாரத்தை நம்ம கலாச்சாரத்தோட குழப்பிகிட்டது.. இதெல்லாம் தான் முக்கிய காரணம். டாக்டர் ஷாலினி ஆண்கள் தான் பெரிதும் காரணம்ன்னு ஒரு காரணம் சொல்லி இருக்காங்க.. இது சுத்த பேத்தல். பொண்ணுங்களோட சம்பந்தம் இல்லாம எப்படி ஒரு ஆண் நடந்துக்க முடியும்.

Anonymous,  Tue Sep 23, 02:58:00 PM  

Living together nu namum western culture konjam konjama moozhga arambichitom nu thonudhu.... modhalla, english pesinom, apuram computer pazhaginom, dressing kooda mathikitom, ana ellam nalla vishyangal, idhu sutha muttalthanam.. naamellam naai illai uravai patri kavalai padamal sugam kanpadharku
Idhu civilisation illai sutha barberia thanam...

Hariharan Tue Sep 23, 07:00:00 PM  

Migachari Siva Subramanian Avargale... Aangal mattum itharku kaaranam alla.... Pengalumthaan...

Manoharan.K Thu Sep 25, 05:39:00 PM  

Itharku innoru kaaranam .. 'thanimai'.. padikumvarai pedrorin aravanaipil irunthu vidu..velai endru vanthavudan thanimayil vaadi ethayo thedi... bin athanaal vaadi... 'cha' ..

As kamalahasan said... ethayum moodi vachaa thiranthu baarka manam alai paayum thaan... 'sex education' is must here.

Anonymous,  Mon Sep 29, 02:16:00 PM  

Can u give me tat Appatment Address...?

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !