என்று தணியும் ?
இந்தியாவில் குண்டு வெடிப்புகள் நிகழ்வது என்பது தற்சம்யம் வழக்கமாகி வருகிறது. அவ்வப்போது மிரட்டல்கள் வருவதும் பின் குண்டு வெடிப்பதும் மற்ற நகரங்கள் உஷார் நிலைப்படுத்துவதும் வாடிக்கையானதாக அமைகிறது. உஷார் படுத்தப்பட்ட நகரங்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள் என பரிசோதனை செய்வதும், பின் எல்லாவற்றையும் மறந்து விட்டு அரசியல், சலுகைகள் என தன் கவனம் செலுத்துவதையும் பெரும் வழக்கமாக அரசியல் கட்சிகள் கொண்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

110 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் எல்லாவற்றையும் கண்காணிப்பது கடினம் என்றாலும் சிறிதளவு அக்கறை காட்டாமல் நாட்களை கடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம் என்று தான் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளும் கடமைக்கு அறிக்கை ஒன்றை அளித்துவிட்டு அவரவர் செயலை செய்ய ஆயத்தமாகின்றனர். எதிர்க்கட்சியின் வாயை அடைக்க அரசும் ஒரு சிலரை கைது செய்து விட்டு படம் வரைந்து செய்தி வெளியிட்டு விளையாட்டுக் காட்டுவதும் ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பின் போது நடக்கின்ற நிகழ்வுகள்.இவை எப்போது மாறும் ? மாறாத வரையில் குண்டு வெடிப்பு நகரங்களும், குண்டு வெடிப்பு நடந்த இடங்களின் எண்ணிக்கையும் மாறிக்கொண்டு தான் இருக்கும்.. குண்டு வெடிப்பு மாறாது.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !