பிளாக் உருவாக்குவது எப்படி ?

பிளாக் உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி உங்களுக்கான வலைப்பூவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

1. முதலாவதாக வலைப்பூ சேவைதரும் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் யாவும் பிளாக்ஸ்பாட்டை அடிப்படையாக கொண்டது. ஆதலால் http://www.blogger.com/ என்னும் தளத்திற்கு செல்லுங்கள். கீழ்கண்ட பக்கத்தை காணலாம்.

2. உங்களுக்கு கூகிள் பயன்பாட்டாளர் பெயர் இருப்பின் கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்லலாம். பயன்பாட்டாளர் பெயர் இல்லாதிருப்பின் உங்களுக்கு உருவாக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் கட்டமிடப்பட்ட CREATE YOUR BLOG சொடுக்கவும்.
3. ஏற்கனவே பயன்பாட்டாளர் பெயர் இருப்பின் sign in first சொடுக்கி login செய்யவும். கூகிள் பயன்பாட்டாளர் பெயர் இல்லாதிருப்பவர்கள் மேலே கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து உருவாக்கிக் கொள்ளவும்.

4. ஏற்கனவே வைத்திருப்பவர்கள் sign in first சொடுக்கி பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை இட்டு sign in செய்யவும்.
5. அடுத்ததாக பிளாக்கின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பிளாக்கின் பெயர் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பானதாக அமைவது அவசியம். அதாவது பிளாக்கின் பெயர் UNIQUE ஆக இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் பெயர் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். BLOG address ஐ கொடுத்து Check Availablity ஐ சொடுக்கும் போது நீங்கள் கொடுக்கும் பிளாக் முகவரி இருந்தால் The blog address is available என்னும் சொல்லைக் காணலாம். நீங்கள் விரும்பும் தலைப்பை இல்லையெனில் வார்த்தைகளை மாற்றி அமைத்தோ அல்லது -, . போன்றவற்றை பயன்படுத்தியோ பிளாக் முகவரியை நிறுவலாம்.

6. அடுத்தாக பிளாக் டெம்ப்ளேட்டை தேர்வு செய்ய வேண்டும். வித்தியாசமான வடிவங்களில், வண்ணங்களில் அமைந்துள்ள டெம்ப்ளேட்டுகளை உங்களின் ரசனைக்கேற்ப தேர்வு செய்து CONTINUE ஐ சொடுக்குங்கள்.

7. உங்களுக்கு Your blog has been created! என்னும் சொல் வரும். அடுத்ததாக START BLOGGING என்னும் பட்டனை சொடுக்கி பதிவுகளை இடும் பக்கத்திற்குச் செல்லலாம்.

கீழே கொடுக்கபபட்டுள்ள பக்கங்களில் நீங்கள் பதிவிடுவதற்கான கருவிகள் உள்ளன. எழுத்துகளை வடிவமைக்க Font, Bold, Color, Italic, Text alignments left, right, center, justify, Spelling Check, Eraser, Language tool, Bullets, Numbering போன்ற கருவிகளைக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கலாம்.
Post பாகத்தின் மேல் பக்கத்தில் Edit Html மற்றும் Compose என்னும் இரண்டு வகைகள் உள்ளன. இதில் Edit HTML முறையில் உங்களால் html coding கொண்டு பதிவுகளை வடிவமைக்க முடியும். Compose முறையில் உங்களால் நேரடியாக போஸ்ட் கருவி கொண்டு வடிவமைக்க முடியும்.

8. தேவையான விஷயங்களை போஸ்ட் பக்கத்தின் மூலப்பகுதியில் வடிவமைத்த பின் PUBLISH POST என்னும் பட்டனை சொடுக்க நீங்கள் வடிவமைத்த பக்கங்கள் இணையத்தில் அச்சிடப்படும். உங்களின் பிளாக் முகவரி கொண்டு அதைக் காணலாம்.
9. PUBLIC POST சொடுக்கிய பின் மேலே கண்ட தகவலைக் காணலாம். View Blog சொடுக்கியும் பிளாக்கை காணலாம். உங்களுடைய பிளாக் கீழ்கண்டவற்றைப் போன்று காணப்படும்.

10. உங்களுடை பிளாக் பக்கத்தின் வடது மூலையில் New Post, Customize ஐ சொடுக்கியும் உங்களால் வடிவமைக்கும் பகுதிக்குச் செல்ல முடியும்.


15 மறுமொழிகள்:

ஆட்காட்டி Tue Aug 12, 06:30:00 PM  

மிகவும் அருமையாக இருக்கிறது.
எனக்கும் வலையில் எழுத வேணும் எண்டு கன நாள் ஆசை.
உங்களது வழிகாட்டுதலுக்கு நன்றி.

asfar Tue Apr 28, 05:27:00 PM  

very Nice best wishes for this article..

Anonymous,  Tue Apr 28, 06:47:00 PM  

thanx a lots

Senthil Tue Apr 28, 07:08:00 PM  

I am waiting for a post like this!!!!!!!!!!


thanks

SAIKRISHNAMURARI,  Tue Apr 28, 08:28:00 PM  

HOW WE'LL GET INCOME SIR

Nilavan Wed Apr 29, 12:10:00 AM  

வாழ்த்துக்களுக்கு நன்றி ..

@ SAIKRISHNAMURARI

பணம் சம்பாதிக்க Ad Sense உபயோகிக்கலாம்..

விரைவில் எழுதுகிறேன்.

Suresh Wed Apr 29, 09:49:00 AM  

நான் பதிவு போடலாம் என்று இருந்தேன் நிங்கள் போட்டு விட்டிர்கள் நல்லது யார் செய்தால் என்ன, இது என் டிராப்டில் எப்போது இருந்தோ இருக்கிறது சரத் பேட்டிக்கு பின்பு என்று இருந்தேன்...

அப்புறம் உங்க பதிவு விகடனில். யூத்புல் விகடனில் வாழ்த்துகள்

Nilavan Wed Apr 29, 12:31:00 PM  

ஆம்..


தற்போது தான் கவனித்தேன்..

தகவலுக்கு நன்றி சுரேஷ்..

konguthamizh Sat Jul 11, 02:55:00 PM  

நன்றி நண்பரே உங்கள் உதவியால் நான் இன்று ஒரு புதிய வலைபின்னல் உருவாக்க முடிந்தது .

கொங்குதமிழ்

Nilavan Sat Jul 11, 03:10:00 PM  

கொங்குதமிழ் அண்ணனுக்கு

வாழ்த்தும் வரவேற்பும் !வாழ்க தமிழுடன்,
தமிழ் நிலவன்.

Anonymous,  Sun Jan 16, 09:46:00 PM  

Superb..! Nice Post. keep Going.

Anonymous,  Mon Jun 17, 11:41:00 AM  

How many months ofter apply to Google ad sense?

Unknown Sun Jun 14, 01:38:00 PM  

this post is very help me & it's genuine

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !