பிபிஓ ரோமியோக்களுக்கு எய்ட்ஸ் எச்சரிக்கை !
கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது தான் உண்மை. பள்ளி, கல்லூரி முடித்தவுடனேயே பிபிஓ எனும் அலுவலகத்தில் நுழைந்து கை நிறைய சம்பளத்துடன் எப்படி செலவழிக்கலாம் என யோசிக்க ஆரம்பித்து அலுவலகம் கற்றுத் தரும் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் பின்பற்றி வார இறுதி நாட்களில் என்ன திட்டம் என திட்டவடிவம் வரைந்து, மூத்த சகாக்களின் 'திறமைகளை' பின்பற்றி எண்ணற்ற ஏனைய விருந்துகளில் கலந்து கொண்டு பின் விருந்தில் ஏற்படும் நட்புறவுகளிலும் தனிமை, பணம் இவற்றை செலவு செய்ய வேண்டி ஐ.டி துறைகளில் நடக்கும் கூத்துகளின் பிரதிநிதியாய் 'சாதனை' புரியும் ரோமியோக்களால் நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகத் தான் இருக்கும்.

தொண்டு நிறுவனங்கள் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு படிப்பறிவில்லாத ஏழைகளுக்கும் பாமரர்களுக்கும் அறிவிக்கப் படுகின்ற அதே நேரத்தில் இனி இவர்களுக்கும் "உறை போடுங்கள்" என அறை கூவல் விட அந்நிறுவங்கள் செலவிட வேண்டும் போலிருக்கிறது.
வாரத்தில் 3 அல்லது நான்கு பேர் மருத்துவரிடம் தங்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுகிறார்கள் என மருத்துவர் சுனிதி கூறுகிறார். ஐ.டி நிறுவனங்களால் பொருளாதாரம் முன்னேறுகிறது,கலாச்சாரம் சீரடைகிறது, விலைவாசி ஏறுகிறது, இடங்களின் விலை முன்னேறுகிறது என இருக்கும் நிலைகளில் பின்காலத்தில் எய்ட்ஸ் எண்ணிக்கையும் முன்னேறுகிறது எனும் நிலை வருமோ ?

( வருவதென்ன....... வந்துடுச்சே ?......... )

2 மறுமொழிகள்:

Anonymous,  Tue Jun 24, 05:31:00 PM  

Vijay so u use condom man dont forget it

Nilavan Tue Jun 24, 06:58:00 PM  

எனது உயிர் நண்பனே !

இது வார்த்தை விளையாட்டுக்காக பதிவிடப்படவில்லை. சமூகத்தில் நடக்கும் சீரழிவுகளைக் கண்டு அதன் அறியாமை போக்க என்னால் இயன்ற சிறு எச்சரிக்கை அல்லது பதிவு.

எழுதுபவனுக்கு தெரியாதா கடைபிடிப்பது பற்றி?

இங்கே தனிமனித விமர்சனமே இல்லை. தனிமனித விமர்சனம் எழுதும் அளவுக்கு உன் மனம் ஏன் குத்துகிறது என் ரோமியோ நண்பனே ?!

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !