அக்ஷ்ய திருதியை


அக்ஷ்ய திருதியையான அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம்.

என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பதுஇந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை செய்பவர்கள்கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை.

நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே.ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது


________________________________________________________________________
'அக்ஷய திரிதியை' என்றால் என்ன?
-நடராஜ கிருஷ்ணன்

நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் அக்ஷய திரிதியை அன்று கடைக்குப் போய் நகை வாங்குவதுதான். 'அக்ஷய திரிதியை' அன்று நகை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பொங்கும் என்றொரு நம்பிக்கை. இது சரியானதா?

முதலில் 'அக்ஷய திரிதியை' என்றால் என்னவென்று பார்ப்போமே. 'அக்ஷய' என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு. மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். 'திரிதியை' என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள்.

'அக்ஷய திரிதியை' எனபது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அக்ஷய திரிதியை ஏழை எளியோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே. அன்றைய தினம், பசித்தோர்க்கு உணவு படைத்தால் ஆயுள் அதிகரிக்கும். இயலாதோர்க்கு உடை கொடுத்தால் பதவி உயர்வு வரும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லியுருக்கிறது. தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பின்னால் வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

'அன்னையர் தினம்', 'மகளிர் தினம்', புதிதாய் 'காதலர் தினம்' என்றெல்லாம் வாழ்த்து அட்டையோடு கொண்டாடுகிறோம். அதுபோல 'அக்ஷய திரிதியை' தினத்தை நாம் 'நல்லுதவி தின'மாய் கொண்டாடலாம். இதற்கு 'மணிமேகலை தினம்' என்றும் பெயர் சூட்டலாம். இதுதான் நாம் நம் முன்னோருக்குச் செய்யும் நன்றியாகும்.


-------- முன்னோர்கள் சொன்ன நல்ல விஷயத்தை விட்டுட்டு நகை கடையில் வரிசையில் நின்னுகிட்டு செல்வம் வரும்னு நிக்கிறீங்களே நியாயாமா பொதுஜனங்களே ? சற்றே வெளியான செய்திப்படி தங்கம் விற்பனை 55 டன் ஐ தாண்டியதாம்.
மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் மனிதனை திருத்த முடியாது

1 மறுமொழிகள்:

Unknown Fri May 09, 07:45:00 AM  

miga sariyana adi... Vazhthukkal thozha...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !