பாரதிதாசன்
பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கபடுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.
பாரதிதாசன் எழுதிய வரிகள்:
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
போன்றவை புகழ் பெற்றவை.
பிறப்பு ஏப்ரல் 29,1891, புதுச்சேரி
இறப்பு ஏப்ரல் 21, 1964 சென்னை
இன்று (ஏப்ரல் 21) பாரதிதாசனின் நினைவு தினம். கணீர் குரலிலும், எழுச்சி மிக்க எழுத்தாலும், கவிநய கவிதையிலும் மக்களை கவர்ந்த அவரையும், அவர்தம் கவிதை, கருத்துக்களையும் நாம் நினைவு கொள்வோம், அவற்றின் வழிநடப்போம்.
2 மறுமொழிகள்:
பாரதிதாசன் பிறந்தநாளில் உங்கள்
தளம் கண்டேன்;உவகை கொண்டேன்.
வண்டமிழ் உரிமையும்
தமிழர் தமன்மானமும் தழைத்தோங்கப்
பாடுபட்ட அந்தப் பாட்டாளியின் புகழ் பரப்பும் அனைவருக்கும் நன்றி.
மறைமலை இலக்குவனார்
சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது......
இதை போன்று ம.பொ. சி இன் வரலாரையும் எழுதினால் நன்றாக இருக்கும்.....
Post a Comment