தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு' தமிழை நேசிக்கும், நேசிக்க துடிக்கும் ஒவ்வொருவனும் பார்த்து ரசிக்க வேண்டிய முக்கியமான நிகழ்ச்சி ஆகும். விஜய் தொலைக்காட்சி சிறப்பான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனிமுத்திரை பதித்து வருகிறது. அதன் ஒரு தமிழ் தொண்டாக தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு அமைந்துள்ளது.

தமிழின் பெருமைகளையும் இலக்கியங்கள் பலவற்றின் அருமைகளையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இளைய சமுதாயத்தின் மூலமே அளிக்கிற பணி மிகச்சிறந்த பணியாகும். இந்நிகழ்ச்சி பேச்சாற்றலுக்கு மட்டுமல்லாமல் அப்பேச்சின் மூலம் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் மூட்டைகட்டி விடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் அருமையையும், அந்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவலையும் நம்மிடைய ஏற்படுத்துகிறது.

தற்சம்யம் ஒளிபரப்பாகும் பகுதியில் காவியச் சுருக்கம் எண்ணற்ற விஷயங்களை நமக்கு அளித்துரைக்கிறது. சிலப்பதிகாரம், பெருந்தொகை, பாஞ்சாலக்குறிச்சி போன்ற காவியங்களின் சுருக்கங்களும் அதன் நயமான விளக்கங்களும் ஆச்சர்யத்தையும் தமிழின் பால் ஆவலையும் ஏற்படுத்த தவறுவதில்லை.

பேச்சாளரகள் மேற்கோள் காட்டும் பாடல்கள் அதனின் உச்சரிப்பும் தவறேற்படில் சுட்டென சுட்டிக்காட்டும் தமிழ்க்கடல் நெல்லை கண்ணனின் தமிழாற்றலும் பிரம்மிக்க வைக்கிறது. தமிழ் பேசும் போதும், குறிக்கீடு செய்து விளக்கம் அளிக்கும் போதும், விவாதங்களில் சீறும்போதும் நெல்லை கண்ணன் சிலிர்ப்பூட்டுகிறார்.

ஒவ்வொருவரும் இந்நிகழ்ச்சியை பாருங்கள், பரவசமடையுங்கள் ....தமிழ்ப்பால் பருகுங்கள் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

1 மறுமொழிகள்:

ஹாரிஸ்(நல்லதமிழன்) Thu Jun 19, 08:15:00 PM  

விஜய் தொலைக்காட்சி தமிழை கொலை செய்யும் தொலைக்காட்சி.....
அது நடத்தும் தமிழுக்கு எதிரான கொலைவெறி ஆட்டத்தை மறைக்க இதுவொரு வேடம் என்றே நான் கருதுகிறேன்.
தமிழ் உடகங்களில் தமிழ் அழிந்தால் அதற்கு முழு பொறுப்பு விஜய் தொலைக்காட்சியே.....

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !