முதல் கவிதை / பரிசு

முதல் கவிதை

ஏழாம் வகுப்பு படிப்பு படிக்கும் போது வகுப்புத் தோழியின் ஏட்டொன்றைப் புரட்டுகையில் கண்டேன் ஒரு கவிதை....

காலேஜ் போனாலும்
மேரேஜ் ஆனாலும் - நான்
உன்னை மறக்க மாட்டேன்

பேபி பிறந்தாலும்
பேர் புகழ் சேர்ந்தாலும் - நான்
உன்னை மறக்க மாட்டேன்..


எத்தனையோ கவிதைத் துளிகளை வாரப் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும் இந்த வார்த்தைகள் மட்டும் இன்னும் என்னுள். தோழி ஒருவளுக்கு அவள் எழுதிய இக்கவிதையை படித்து முடிப்பதற்குள் விடுக்கென பிடுங்கிச் சென்றாள் அவள். மேரேஜ், பேபி போன்ற வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து புன்னகைத்த என்னைப் பார்த்து வெட்கிச் சென்றாள் நானத்துடன்.


முதல் கவிதை பரிசு


ஒன்பதாம் வகுப்பின் ஆண்டு விழாவுக்கான அடுக்கடுக்கான போட்டிகளில் கவிதைப் போட்டியும் வந்தது. சமுதாய முன்னேற்றம் என்ற தலைப்பில் போட்டி அறிவிக்கப் பட்டது. அதன் வரிகளும் வார்த்தைகளும் ஞாபகமில்லை. பேருந்து பயணத்தில் அறிமுகமான அன்பர் ஒருவரின் கைவண்ணத்தில் கவிதை தயாரானது. எப்படி படிக்க வேண்டும் என்று தாயார் படுத்தி வைத்தாயிற்று. அதன் வார்த்தைகளும் வரிகளும் ஞாபகமில்லை.

போட்டி நாளன்று கவிதை படிக்க வந்தவர்களில் மொத்தம் இரண்டு பேர். நானும் சங்கிலி என்னும் மாணவன் ஒருவனும். ஏற்ற இறக்கத்துடன் படித்து முடித்து விட்டு இறங்கியாயிற்று. மொத்தமே இரண்டு பேர் என்பதால் முதல் பரிசை எனக்கும் இரண்டாம் பரிசை சங்கிலிக்கும் அளித்தார்கள்.இது தான் நான் கவிதைக்கு வாங்கிய (இரவலாக) முதல் பரிசு. பரிசு என்ன தெரியுமா ? திசம்பூர் பூ கலரில் ஒர் அழகான சோப்பு பெட்டி.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !