ஒரு கேள்வி - ஒரு பதில் !

( கவிதாவின் கேள்வியும், திருநங்கை விதயாவின் பதிலும்.... )

கவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?


இதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது? இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது? என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?நன்றி : http://kavithavinpaarvaiyil.blogspot.com/

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !