மனிதன் பிறக்கும் போது கூடவே பிறக்கும் குணம் எது ?


குணமெல்லாம் போகப் போக வருவது. பிறக்கும் போதே மனிதன் எதற்குத் தயாராகிறான் என்று கேளுங்கள்!

1. உயிர் வாழ;
2. இன்னொரு உயிரை உற்பத்தி செய்ய!

உயிர் வாழ, வாய்வழியாகச் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு, பிறந்த உடனேயே குழந்தைக்கு வந்து விடுகிறது. அதற்கு முன்பே, கர்ப்பம் ஏற்பட்ட எட்டாவது வாரத்தில் (அதாவது ஒண்ணே கால் அங்குலமே உள்ள குழந்தைக்கு) ஆண் - பெண் உறுப்புகள் உருவாகத் துவங்குகின்றன.


பிறக்கும் போதே பெண்ணுக்குள் மூணரை லட்சம் முட்டைகள் ரெடி! அதில் சுமார் 400 முட்டைகளே கர்ப்பத்துக்குத் தயாராகின்றன. முதல் முட்டை வெளிவருவதுதான் 'வயசுக்கு வருவது'!


எட்டாவது வாரத்தில், ஆண் குழந்தைக்கும் உறுப்பு(penis) தயார். வயிற்றுக்குள் இருக்கும்போதே அது அவ்வப்போது விறைத்துக் கொள்வதைக் கூட 'ஸ்கேனிங்' மூலம் பார்த்துவிட்டார்கள்! எதிர்காலத்துக்காக இப்போதே 'டெஸ்ட்' பண்ணிக் கொள்கிறது!- நன்றி 'ஹாய் மதன்'

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !