நட்பு !

நட்பு எனபது அழகான உறவு. இது ஏற்படுத்திக் கொண்ட உறவு என்றாலும் இயற்கையாக அமைந்த உறவுகளைவிட உயர்ந்ததாகவே இருந்துள்ளது. இதை உணர, இந்த உண்மை நிகழ்ச்சியயும் அறிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். ஒருவன் ஹாரி மற்றொருவன் பில். இணை பிரியாத நண்பர்கள், பள்ளிக்கூடம் கல்லூரி எல்லாம் ஒன்றாகப் படித்து, ராணுவத்திலும் ஒன்றாகப் பணி புரிந்து வந்தனர்.

ஒரு முறை போர் மூண்டது. போர்முனையிலும் இருவரும் ஒரே படைப்பிரிவில் இருந்தனர். ஓர் இரவு அவர்களின் படைப்பிரிவு, எதிரிகளின் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது. இருளில் குண்டுகள் பறந்தன. வீரர்களில் பலர் சிதறிப் போனார்கள். ஹாரியும் இன்னும் சில வீரர்களும் பதுங்கு குழிகள் இருந்தபோது, வெளியில், இருளில் இருந்து மெல்லிய குரல் கேட்டது. 'ஹாரி, எனக்கு உதவி செய் ! "

அது, தன் நண்பனின் குரல் என்று ஹாரிக்குத் தெரிந்தது. நண்பனுக்கு உதவ, தன் தலைவனிடம் அனுமதி கேட்டான் ஹாரி. ஆனால் நிலைமை மோசமாக இருந்தது. வீரர்கள் பலர் கொல்லப்பட்டு விட்டனர். தாக்குதலை எதிர்கொள்ள் இருந்த வீரர்களோ குறைவு. வெளியிலோ குண்டு மழை!

'இந்த நிலைமையில் உன்னை வெளியே போக அனுமதித்தால், நீயும் கொல்லப்படலாம். தவிர, பில்லியன் குரலிலிருந்து அவன் அதிக நேரம் உயிருடன் இருப்பான் என்று தோன்றவில்லை' என்று ஹாரிக்கு அனுமதி தர மறுத்தான் தலைவன். வேறு வழியில்லாத ஹாரி, அங்கேயே இருந்து விட்டான். சற்று நேரத்தில் பில்லியன் குரல் மீண்டும் கேட்டது; 'ஹாரி, தயவுசெய்து எனக்கு உதவி செய்!"

ஹாரியால் பொறுக்க முடியவில்லை. அவன் தன் தலைவனிடம், 'பில் என் சிறு வயது நண்பன். அவனுக்கு உதவ என்னை அனுமதியுங்கள்' என்று மன்றாடினான். தலைவன் வேறு வழியின்றிச் சம்மதித்தான்.

ஹாரி பகுங்கு குழியிலிருந்து வெளியே வந்தான். இருளில் வெகு நேரம் தேடி, நண்பனைக் கண்டுபிடித்தான். அவனைச் சுமந்து கொண்டு பதுங்கு குழிக்கு வந்து சேர்ந்தான். ஆனால் என்ன பரிதாபம்! பில் இறந்து போயிருந்தான்.

தலைவன் ஹாரியிடம் சொன்னான். 'பில் பிழைக்க மாட்டன் என்று அப்போதே சொன்னேன். என் பேச்சைக் கேட்காமல் போன நீயும் கொல்லப் பட்டிருப்பய். புரிந்து கொள், நீ செய்தது தவறு!"

"இல்லை நான் செய்தது சரிதான்!" என்ற ஹாரி தொடர்ந்து கூறினான். 'நான் பில்லைக் கண்டுபிடித்த போது அவன் உயிருடன் இருந்தான். என்னைப் பார்த்ததும் பில் சொன்ன கடைசி வார்த்தைகள் இவைதான். 'ஹாரி, நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்!" - இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா ? நட்பு ஆழமானது. என்வே உங்கள் சந்தேகத்தால் அழகானதோர் உறவை இழந்து விடாதீர்கள். நல்ல உறவு, சுயநலம் இல்லாத நட்பு என்பதெல்லாம் அபூர்வமானவை. அவற்றை வளர்த்துக் கொள்வது நமது பொறுப்பு. உங்கள் உயிர் நண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

நாம் நமது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால், உற்வுகள் இல்லையெனில் வாழ்க்கையே இல்லை என்பதை உணர்வீர்கள். தாயுடன் துவங்கும் நமது உறவு, தந்தை, உடன்பிறப்பு, மனைவி, குழந்தை, நண்பர்கள், சுற்றத்தார் என்று உடலில் உயிருள்ளவரை வளர்ந்து கொண்டே இருப்பதைப் பார்ப்பீர்கள். நல்ல உறவுகள் என்பது கடவுள் நமக்களித்திருக்கும் வரம். அவற்றைச் தழைக்கச் செய்யுங்கள்.

இயல்பான உறவோ, ஏற்படுத்திக் கொண்ட உறவோ அது ஆலமரம் போல வேரூன்றித் தழைப்பதை நீங்கள் காண்பீர்கள். இதனால் கிடைக்கும் மனத் திருப்தியும், பேரின்பமும் அனுபவத்தால் மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடியவை.

- படித்தது......!

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !