உண்மையான மனைவி


வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு நிறைய பணம் சம்பாதித்த, தனது பணத்தை விட்டு பிரிய விரும்பாத, பணத்தின் மீது பிரியமுள்ள ஒரு பணக்காரன் தன்னுடைய வயதான காலத்தில் இறக்கும் தருவாயில் தன் மனைவியிடம் "நான் இறந்த பின்பு நான் சம்பாதித்த பணத்தை என்னுடன் ஒரு பெட்டியில் வைத்து விடு. என்னுடைய பணத்தை எனது வாழ்க்கைக்குப் பிறகும் எனக்கு வேண்டும். செய்வாயா ?" என்றான்.
மனைவியும் அவ்வாறே செய்கிறேன் என வாக்கு கொடுத்தாள். ஒரு நாள் கணவன் இறந்து விட்டான். இறுதிச் சடங்குகள் எல்லாம் நடந்து சவப்பெட்டி தாயாராகி சவப்பெட்டியை மூடுவதற்கு முன் "கொஞ்சம் பொறுங்க..." என்று உள்ளே சென்று ஒரு இரும்புப் பெட்டியை சவப்பெட்டியுடன் வைத்து பின் மூடி விட்டாள். அருகில் இருந்த நண்பர்கள் "என்ன உன் கணவன் சொன்னார் என்பதற்காக நீ எல்லா பணத்தையும் சவப்பெட்டியுடன் புதைக்கப் போறீயா? இந்த முட்டாள் தனத்தைப் பண்ணாதே !" என்றனர்.
அவள் "நான் அவருக்கு வாக்கு கொடுத்து விட்டேன், என்னால் அதை மீற முடியாது ! அதனாலே எல்லா பணத்தையும் பெட்டியிலே போட்டு சவப்பெட்டியிலே போட்டுட்டேன். நண்பரும் "அப்படின்னா..... எல்லா பணத்தையும் அந்த பெட்டியிலேயா போட்டுட்டா ?!"

மனைவி "ஆமாம்... எல்லா பணத்தையும். ஆனால் பணமா போடலை. எல்லா பணத்தையும் என் பெயரில் வங்கியில் போட்டுட்டு, அவருடைய பெயரில் காசோலையை அவரின் பெயருக்கு எழுதி அந்த இரும்புப் பெட்டியில் போட்டுட்டேன். அதை அவரால் பணமாக்க முடிந்தால் அவர் செல்வழிக்கட்டும்.

( இது எல்ல அறிவுள்ள பெண்களுக்கும், மற்றும் பெண்களைவிட நாங்கள் அறிவாளிகள் என எண்ணும் எல்ல ஆண்களுக்கும்.)

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !