கண்ணெதிரே...தோன்றினாள் !

நீ என் அருகிலிருந்தால்
உலகமே மிகவும்
எளிதாகிறது...
வாழ்க்கை வளமானதானதொரு
மனநிலை..!

உன் முகம் காண்கின்ற சில
நிமிடங்கள்,,,!
எண்ணிலடங்கா வசந்தம்
வீசுகிற்தே..!

இன்பத்தேன் வந்தது காதினிலே
உண்மையாகவே
உணர்ந்தது என் மனம்
குரல் கேட்டு..!

புத்தம் புதிதாய் புன்னகை
சலனமில்லா பார்வை
முழுநிலவைப் போன்ற உன் முகம்

குதூகலம் தரும் - இவை
அனைத்தையும்
எனக்கென எடுத்துக் கொள்ள
நினைக்கையில்-என்
எண்ணம் புரிந்து நீ
துண்டித்துக் கொண்டாய்
உன் நட்பை - என்
நினைவையும் சேர்த்து....!

நினைவுகள் என்னில்
ஊசலாடியது ..
வீதிகளில் உன் முகம்
தேடியது என் மனம்.
எத்தனையோ தொலைபேசிக்
குரல்கள் உன்னையே
நினைவுபடுத்தின...

நம்பிக்கை ஒன்று
மட்டும் இருந்தது - என்றாவது
உன்னைக் காண்பேன் என்..

நம்பிக்கை வென்றது ....
கண்டேன் உனை
தற்செயலாய் - ஆனால்
தற்காலிகமாய் என் இதயம்
என்னிடத்தில் இல்லை
உன்னைக் கண்டவுடன்...
ஆயிரமாயிரம் சுனாமியலைகள்
இழுத்துச் சென்றது
என் நினைவுகளை..


இப்போது என்னைக் கேட்டுக்
கொண்டேன் ?

ஏன் என்
கண்ணெதிரே தோன்றினாய்
உன் காதலனுடன்?

எனை நோக்கி
வெட்கப்பட வேண்டிய உன் முகம்
ஏனோ எவனுக்காகவோ
வெட்கப்பட்டு சிவந்து கிடந்தது..
கடைக்கண் கடை விரித்து தேடியது
அந்த கயவன் காதலனை
கடந்து சென்றேன் நான்
கனத்த நெஞ்சுடன்.....

- நிலவன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !