ஆ'பாச' வீடியோ !

சமீபத்தில் ஒரு ஆ'பாச' வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. கர்ப்பம் அடைந்த ஒரு பெண் குழந்தையை ஈனும் காட்சி. அந்த வீடியோவை மறுமுறை பார்க்க முடியவில்லை, அந்த அளவுக்கு மயிர்க்க்கூச்செரியும் காட்சிகள். அப்பெண்ணிடமிருந்து குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. முதலில் தலை வெளியே வரப்பாக்கிறது. தலை சிறிதளவு பெரிதாக இருப்பதால் வெளிவரும் இடத்தில் சிறிதளவு கத்தியால் கீறப்படுகிறது. ஆங்கே இரத்தம் பீறிட்டு வருகிறது. சிறிதளவு முயற்சிக்குப் பிறகு தலை வெளியே வந்து, சில நேர மயிர்க்கூச்செரியும் போராட்டத்திற்குப் பிறகு அக்குழந்தை முழுதாய் வெளியே வந்து விழுகிறது.

சாதரணமாக நமக்கு இந்த விதமான ஒரு சில ஆபாச வீடியோவை பொழுதுபோக்காக பார்ப்பதுண்டு. ஆனால் இந்த வீடியோவை ஒரு ஆண் பார்க்கும் போது அவன் தான் இந்த உலகிற்கு வந்த பாதையையும், குழந்தையைப் பெறும் பெண்ணை தாயாகவும்,தாயின் அரியதொரு பணியையும், தான் அப்படி தான் வெளிவந்தோம் என்ற அரிய உண்மையையும் அறிவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உணரலாம்.

ஆனால் ஒரு இளம்பெண் இந்த வீடியோவைப் பார்த்தார் எனில் சிறிது கலங்கியே போவார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் தான் இப்படி தான் வெளிவந்தோம், தன் தாய் இப்படி தான் பெற்றெடுத்தால் என நினைக்கும் முன்பே தானும் பின்னால் இப்படி தான் குழுந்தையை பெறப்போகிறோம் என்றே நினைப்பாள் என்றே கருதுகிறேன் (அனுபவஸ்தவர்கள் தெரிவிக்கவும்).


இதுமாதிரியான வீடியோவைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. ஆகையால் நான் சில தருணங்களில் சிலுசிலுத்துப் போனதுண்டு. அதோடு என் தாயையும், என்னைப் பெற்றெடுத்த தருணத்தையும் நினைத்துக் கொண்டேன். உங்களுக்கு வேண்டுமென்றால் எனக்குத் தெரிவியுங்கள். அனுப்புகிறேன். (ஆண்களுக்கு மட்டும்).

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !