தோழி அவள்(!)
மொத்த தேசத்து மலர்களின்
அத்தனை அம்சங்களையும் - தன்
அங்கங்களில் அரங்கேற்றி
மலரின்
மென்மையையும்,
மிருதுதன்மையும்,
நறுமணத்தயும்,
அழகையும் - தன்னில்
கொண்டிருப்பாளோ ?!


மின்னும் நடிகையைப் போலன்றி,
அன்னை தெரசாவின் அன்பினை - தன்
அகத்தில் ஆழ்த்தி,
தாயின்
கருணையையும்,
பாசத்தையும்,
அறிவையும் - தன்னில்
ஆட்கொண்டிருப்பாளோ ?

பார்த்தவுடன்,
பதறித் துடிக்கும் பரவசம்
படபடவென பரவி
விந்தை வியக்கும்,
சிந்தை சிதைக்கும்,
அழகுடன் - என்னை
சிதைத்து விடுவாளோ?

கனநொடிப் பொழுதில்
கண்கள் துலாவி,
செவ்விதழகள் திறந்து,
புன்னகை புரிந்து - எந்தன்
தன்னிலை தகர்க்கும்
தந்திரத்தை - தன்னகத்தே
கொண்டவளோ?

கன்னிப் பேச்சில்,
குறும்பு நெடியுடன்,
சில்லெனும் சினுங்கலுடன்,
வள்ளெனும் பொய்க்கோபத்துடன்,
சிற்சில செயல்கள் செய்து
சிறையில் தள்ளி
சித்ரவதை செய்வாளோ?

தாலாட்டி சீராட்டி,
தன் மடியமர்த்தி,
பசியமர்த்தி,
பாசம் காட்டிடும்
என் தாயின் அன்பினை,
தன்னில் காட்டிடுவாளோ?
தோழி அவள்(!)

- நிலவன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !