போக்கிரி - சினிமா விமர்சனம்.
சிட்டியில் அட்டூழியம் செய்யும் இரண்டு ரவுடி கும்பல்களை தாதாக்களுடன் சேர்ந்து பக்காவாக திட்டமிட்டு விஜய் எப்படி அழிக்கிறார் என்பது தான் கதை.

விஜயின் வழக்கமான ஆக்சன் படம் தான் என்றாலும் படம் முழுக்க அமைதியை தவழ விட்டிருக்கிறார். "முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" என்பது தான் விஜய் விடும் பன்ச் வசனம். ஆங்காங்கே சுற்றிக் கொண்டு, தாதாயிச வேலை பார்த்துக் கொண்டு, ஒரு ரவுடியாய் விஜய் வருவது இப்படத்தில் புது அனுபவம்.

அசின் வழக்கமாக விஜயை சுற்றி சுற்றி வந்து காதலிக்கிறார், சில நேரங்களில் ஏரோபிக்ஸ் மாஸ்டராகவும் வருகிறார், காதலை சொல்லும் இடத்தில் விஜயின் அதிரடி கொலைகளைப் பார்த்து கலங்கி ஓடுவதில் கொஞ்சம் அழுதும் இருக்கிறார்.

வடிவேலு கொஞ்சம் வில்லத்தனமாக வந்து இருக்கிறார், அசினின் ஒரு தலைக் காதலனாக, வந்து ஒவ்வொரு இடத்திலும் காமெடி சிதறல்களை அவிழ்த்து விடுகிறார். அதிலும் அசினுடன் டூயட் பாடும் "சுற்று விழி சுடரே...." அருமையிலும் அருமை.... அதே கஜினி பாடலின் கிராபிக்ஸ் ஒளிப்பதிவுடன்.

இடைவேளைக்குப் பின்பே என்ட்ரி கொடுக்கும் பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் இப்படத்திலும் அருமை ஆனால் குறைவான காட்சிகளுடன். அதிலும் தூங்க மாட்டேன் என்பதும், கடைசி நேர சண்டையில் 'செல்லம்' வேண்டாம் என்பதும், பயத்தில் ஒன் பாத் ரூம் போவதும் அவருக்கே உரிய டிரேடு மார்க் வில்லத்தனம்.

தெலுங்கில் வெளியான "போக்கிரி" படத்தை அப்படியே ரீமேக் பண்ணி இயக்கி இருக்கிறார் பிரபுதேவா. தமிழுக்கு ஏற்றமாதிரி மாற்றி இருக்கிறோம் என போக்கிரி டீம் சொன்னாலும், தெலுங்கு படத்தின் ஜெராக்ஸ் அப்படியேதான் இருக்கிறது.

'வசந்த முல்லை', 'முத்தம் ஒன்று கொடுத்தால்', மற்றும் போக்கிரி பொங்கல் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது, மற்றபடி விஜயின் வழக்கமான அதிரடி ஹிட் சாங்ஸ் மற்றும் விஜயின் டிரேடு மார்க் குறும்புத்தனம் இதில் மிஸ்ஸிங்.

விஜயின் முதல் பைட்டிலில் வரும் ஒரு வசனம்.

"எல்லாம் சொத்தையா இருக்கிறாங்க......... நமக்கு நல்ல பொங்கல் தான் என்று..." மற்ற படங்களுடன்
போட்டி போடும் போக்கிரி - விஜய்க்கு நல்ல போக்கிரி பொங்கல் தான்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !