ஒரு கேள்வி - ஒரு பதில் - II

பெண்களை ஆண்கள் ரசிப்பதுபோல், பெண்களும் ஆண்களை ரசிக்கிறார்களா? (திருட்டுப் பார்வை மூலம்?)

திருட்டுப் பார்வையா? எந்த யுகத்தில் இருக்கிறீர்கள்! ஆண்களைவிடப் பல மடங்கு பெண்கள் (ஆண்களை) ரசிக்கிறார்கள். சந்தேகமே வேண்டாம்! ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், ஆண் உணர்ச்சி மயமாக ஆகி விடுவதால் அவன் மூளை அவ்வளவாக வேலை செய்வதில்லை! பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்களின் மூளை துறுதுறுவென்று இயங்குவதால் ஆணை ரொம்ப நுணுக்கமாக ரசிக்க முடியும்.

ஒரு காதல் ஜோடியிடம் வினாத்தாள் கொடுத்தால், ஆண் பரிதாபமாக 'நான் எதையும் கவனித்ததில்லை, அவள் முகம்தான் முழு நிலவு போல எனக்குத் தெரிகிறது!' என்பான். அதுவே பெண் (காதலனைப் பற்றிய) அனைத்துக் கேள்விகளுக்கும் - காதுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும் மச்சம் உட்பட - கட்சிதமான விடைகளை எழுதுவாள்!

- 'ஹாய் மதன்' லிருந்து.....

2 மறுமொழிகள்:

S.K.Ramachandran Wed Nov 22, 02:45:00 PM  

'நான் எதையும் கவனித்ததில்லை, அவள் முகம்தான் முழு நிலவு போல எனக்குத் தெரிகிறது' - I seriously doubt this, my dear friend ;-)

Anonymous,  Sun Oct 03, 10:17:00 PM  

காதல்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !