வணக்கம் : ஈர்த்ததில்


தமிழன்பர்களுக்கு எனது இனிய வணக்கங்கள்,

விஜயலட்சுமணன் என்னும் இயற்பெயர் கொண்ட நான் நிலவன் என்னும் புனைப்பெயரில் இவ்வலைப்பூவினை எழுதத் தொடங்குகிறேன். நாம் கடந்து செல்லும் வாழ்க்கையிலும், பயணங்களிலும், ஏனைய நிகழ்வுகளிலும், புத்தகங்களிலும் எங்கேயோ எவையோ நம் மனதை ஈர்த்துவிட்டுச் செல்லும்.  அம்மாதிரியானவற்றை இங்கே அலங்கரிப்பது தான் இவ்வலைப்பூவின் நோக்கம். 

எனது எண்ணங்கள், பார்வைகள் போல ஈர்த்ததில் எனும் சொல் எனக்கு ஈர்த்தவைகள் அல்லது என்னால் ஈர்க்கப்பட்டவைகள் எனும் பொருள் கூறுவதால் இப்பெயரினை இட்டுள்ளேன். நான் சேகரித்து செதுக்கும் விடயங்கள் யாவும் உங்களையும் ஈர்க்கும் என்றே நம்புகிறேன்..

எனது கருத்துக்கள் உங்களின் கருத்துக்களுக்கு முரண்படுமாயின் அதை இங்கே மறுமொழியிடுங்கள், விவாதிக்கலாம். அடுத்தபடியாக இயன்ற வரை இனிய தமிழில் எழுத வேண்டும் என்பது திடமான எண்ணம். எனது எழுத்துக்களில் கலக்கும் பிறமொழி எழுத்துக்களை சுட்டிக்காட்டவும். கணிப்பொறியில் தட்டச்சு செய்வதனால் ஏற்படும் பிழைகளையும் சுட்டிக் காட்டவும்.

அவ்வப்போது கடித முறையில் உங்களைச் சந்திக்கிறேன்..

வாழ்க தமிழுடன்,
நிலவன்.


தேதி : 25 நவம்பர் 2006

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !