யூனூஸ் - நோபல் பரிசு


உண்மையான உதவி என்பது மீனை இலவசமாக கொடுப்பது அல்ல. மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதுதான் - என்பதை சாதித்துக் காட்டியவர் தான் யூனூஸ். அவர் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு சாதித்தது என்ன?

1. பேராசிரியராக பணியாற்றிய யூனூஸ், மக்கள் உழைத்தாலும், பட்டினியில் இருக்க காரணம் கடன் சுமைதான் என்று கண்டறிந்தார். அதனால் அவர்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்தார். மக்களும் பாடுபட்டு ஒழுங்காக பணத்தை திருப்பி கொடுத்தார்கள். இதிலிருந்துதான் கிராமீன் வங்கி ஐடியா உதயமானது. 1976-ல் தொடங்கப்பட்ட கிராமீன் வங்கி இதுவரை 53 லட்சம் பேருக்கு சுமார் 2500 கோடி வரை கடன் வழங்கி இருக்கிறது.

2. பிச்சைக்காரர்களை வியாபாரிகளாக்கியது. வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்கும் போது, சில பொருட்களையும் எடுத்துச் சென்று விற்குமாறு சொல்லப்பட்டது. இதில் ஒரே ஆண்டில் 38 இலட்சம் பிச்சைக்காரர்கள் பங்கேற்று வியாபாரிகளாக மாறினர்.

3. கிராமீன் வங்கியிலிருந்து 90 இலட்சம் கிராமவாசிகளுக்கு கடனாக செல்போன் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் செல்போனை இரவல் கொடுத்து கட்டணம் வசூல் செய்து லாபம் ஈட்டும் முறையைக் கொடுத்தார்.

4. கதர் போன்ற கைத்தறி உடைகளை வாரத்தில் ஒரு முறையேனும் உடுத்த வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினார். இன்று இந்த உடை, தினசரி உடுத்தும் பலரும் உடுத்துகின்றனர்.

இவை நமது நாட்டில் செயல்படும் 'மகளிர் சுய உதவிக்குழு' போன்றது தான். யூனூஸின் தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்தியாவிலும் சுய உதவிக் குழு ஏறபடுத்தப்பட்டது. சுய உதவிக் குழு இன்னும் மெறுகேற்றப்பட்டு செயல்படுத்தப்படுமானால் இந்தியாவிலும் புரட்சி ஏற்பட எண்ணற்ற வாய்ப்புண்டு.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !